Thursday, 14 August 2014

சும்மாவா வீசிற்று சுதந்திரக் காற்று ?

நம் நாட்டை ஆண்ட மன்னர்களிடமோ ஒற்றுமை இல்லை, மக்களிடமோ அந்நியரை எதிர்க்க சரியான வழிகாட்டுதலில்லை, இயலாமை , கொடிய வறுமை , பயம் இப்படி பல காரணங்கள் ... எப்படியிருந்தாலும் விடுதலை பெற்றுத்தானே ஆகவேண்டும் ?

விடுதலை வேட்கையோடு களமிறங்கிய காளையர்கள் பலர், நம்மிடமோ கத்தியும், வேலும் , வில்லும் ,ஈட்டியும், சூலமும்...அந்நியரிடமோ துப்பாக்கியும், பீரங்கியும், வெடிகுண்டும்...இருந்தபோதும் துப்பாக்கியைத் துச்மென்றும், வெடிகுண்டை வெத்து வேட்டு என்றும் நினைத்துத் தம் உயரை மாய்த்துக் கொண்டவர் பலர் .

"அகிம்சை வழியே சிறந்தது" என்றார் காந்தி, "இரத்தம் கொடுங்கள் சுதந்திரம் பெற்றுத் தருகிறேன் " என்றார் நேதாஜி, இருவேறு பாதைகள் ஆனால் நோக்கம் ஒன்றுதான், அது பூரண சுதந்திரம் !

நம் மக்களிடமே நம் நாட்டைப்பற்றி இருந்த தவறான, கீழான, எண்ணங்களை, "நம்மால் சுதந்திரம் பெற முடியாது" என்று துவண்டு கிடந்த மனிதர்களைத் தன்னம்பிக்கையோடு "எழுமின்" என்றும், சாதியக்கொடுமைகள் முதல் பெண்ணடிமை வரை, அத்துனை ஏற்றத்தாழ்வுகளையும் உடைத்தெறிந்து நாட்டு விடுதலை ஒன்று தான் முக்கியம், "இந்தியா உலகின் குருவாக மாறும், பாரத அன்னை மீண்டும் தலை நிமிர்வாள்"    என்றார் வீரத் துறவி விவேகானந்தர்.    

இப்படி எண்ணற்ற தலைவர்களின் எண்ணத்தில், கனவில் , உயர்த்தியாகத்தில், கண்ணீரில், இரத்தத்தில் கிடைத்தது தான் நம் இந்தியத் திருநாட்டின் சுதந்திரம்!


சும்மா வீசிவிடவில்லை சுதந்திரக் காற்று !   

"இரத்தத்தை வியர்வையாகச் சிந்திஉயிரை துச்சமென எண்ணிபோராடிஅடிபட்டுஉதைபட்டுசிறைசென்றுவதைபட்டுநம் முன்னோர் 
பெற்றுத்தந்தது தான் நம் சுதந்திரம்!"

No comments:

Post a Comment