1வது அவதாரம் - மச்ச அவதாரம் (மீன்) - நீரில் வாழும் உயரினம். உயரினங்கள் முதன் முதலில் நீரில் தான் தோன்றின(டார்வின் கூற்றுப்படி) உதாரணம் ஒரு செல் உயரி "அமீபா" உலகில் தோன்றிய முதல் உயரினம்.
2வது அவதாரம் - கூர்ம அவதாரம் (ஆமை) - நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியது.
3வது அவதாரம் - வராக அவதாரம் (பன்றி) - நிலத்தில், குறிப்பாக சகதியில் (நீரும் மண்ணும் கலந்தது) குட்டைகளின் அருகில் நீர்நிலைகளின் அருகில் வாழக்கூடியது.
4வது அவதாரம் - நரசிம்ம அவதாரம் (சிங்கமும் மனிதனும் இணைந்தது) - மிருக குணமும், மனித குணமும் இணைந்தது, மனிதனுக்கு முந்திய பிறவி. மிருக இயல்பே மேலோங்கி இருந்தது.
5வது அவதாரம் - வாமன அவதாரம் (குட்டையான மனிதன்) - முதலில் தோன்றிய சிறிய மனிதன்.
6வது அவதாரம் - பரசுராம அவதாரம் - முரட்டு மனிதன், காடுகளில் ஆயுதங்களுடன் வாழும் கடின மனிதன்.
7வது அவதாரம் - ராம அவதாரம் - முழுமையான மனிதன் ; சமுதாயமாக வாழும் ; சூது ; பொய்; சினம் கொள்ளாத மனிதன். நல்லவன்.
8வது அவதாரம் - கிருஷ்ணா அவதாரம் - அரசியலில், கால்நடை வளர்ப்பில் திறமையான மனிதன். சூப்பர் ஹீரோ.
9வது அவதாரம் - பலராம அவதாரம் - விவசாயத்திற்கு முன்னுரிமை; பூரண அறிவைத் தேடும் மனிதன்.
10 வது அவதாரம் - கல்கி அவதாரம் - "தீய செயல்கள்" செய்யும்
மனிதனை அளிக்கும் கடவுளின் இறுதி அவதாரம்.
"சமுதாயத்தில் நடக்கும் தவறுகளை நீக்க; சமூகா சேவை செய்யும் ஒவ்வொரு மனிதனும் கல்கி அவதாரமே !"
No comments:
Post a Comment