மதத்தில் நம்மிடம் வேறுபாடு இருக்கலாம்
மொழியில் நம்மிடம் வேறுபாடு இருக்கலாம்
உணவில் நம்மிடம் வேறுபாடு இருக்கலாம்
ஆனால் நாம் அனைவரும் "இந்தியர்" என்ற ஒரே தேசிய இனம் !
இமையம் முதல் குமரி வரை இது ஒரே நாடு !
நாம் அனைவரும் ஒரே மக்கள் !
நம்முடைய விழாக்கள் , அடிப்படை திருமண முறைகள் , கலாச்சாரம், பண்பாடு, அனைத்தும் அனைவருக்கும் பொதுவானவையே ! நம்முடைய நாடு கலாச்சார ரீதியாக ஒன்றுபட்டுள்ளது ... அதன் பெயர் ஹிந்து கலாச்சாரம்...இங்கு "ஹிந்து" என்பது மதத்தின் பெயர் அல்ல கலாச்சாரத்தின் பெயர் ...
சுவாமி விவேகானந்தர் கூற்றுப்படி ஹிந்து என்று சொல்லத்தேவையில்லை "வேதாந்தி" என்றுதான் சொல்லவேண்டும். அதற்கு வேதங்களைப் பின்பற்றுபவர் என்று பொருள்.
அரேபியர்களும் இதைத்தான் சொல்கின்றார்கள் ஹிந்து என்பது, ஹிந்து மதத்தை மட்டும் குறிக்கும்சொல்லல்ல அது இந்தியாவைக் குறிக்கும் சொல் என்று !
ஹிந்து என்பதற்கு இந்தியாவில் வாழும் மக்கள், இந்த நிலப்பரப்பில் வாழும் மக்கள் இனம் என்பதுதான் சரியான பொருள் ! இதை முதலில் இங்கு இருக்கும் ஹிந்துக்கள் புரிந்தகொள்ள வேண்டும் !
ஹிந்து என்பது மதமல்ல, கலாச்சாரம் !
No comments:
Post a Comment