சுவாமி விவேகானந்தர்

"SWAMI VIVEKANANDA"


"வீரத் துறவி விவேகானந்தர்"

"உலக தேசங்களே ! எங்கள் சிறுவர்கள் பசியோடும், பட்டினியோடும் இருகிறார்கள், அவர்களுக்கு உணவளிக்க "நீங்கள் பணம் கொடுங்கள் " அதற்குப் பதிலாக இந்தியாவில் இருந்து "ஆன்மீக வளங்களை, ஆன்மீகச் செல்வங்கள்" நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள், என்தேசத்து மக்களுகாக நான் உங்களிடம் கை ஏந்தி பிச்சை கேட்கிறேன் " என்று எம் மக்களுக்காக அழுதவன்,போராடியவன், உழைத்தவன், என் தேசத்தலைவன் வீரத் துறவி விவேகானந்தன்.

"பலவீனத்திற்குப் பரிக்காரம் பலத்தை நினைப்பதே தவிர பலவீனத்தை நினைப்பதல்ல"

"ஆன்மீக ஒளியே உலகிற்கு இந்தியாவின் நன்கொடை ... " 


"தலைவரிடம் ஒழுக்கம் இல்லாதபோது, அவர்மீது நம்பிக்கையோ ஈடுபாடோ ஏற்பட முடியாது. தலைவர் தூய்மையானவராக இருக்கும்போதுதான், அவர் மீது நிலையான விசுவாசமும், ஈடுபாடும் ஏற்பட முடியும்" 

"தூய்மை மற்றும், மெளனத்தில் இருந்து ஆற்றல் மிக்க சொற்கள் பிறக்கின்றன"


"ஓர் இளம் விதவைப்பெண்ணின் கண்ணீரைத் துடைக்காத; ஓர் ஏழைச் சிறுவனின் பசியைப் போக்காத எந்த ஒரு மதத்தையும் நன் மதமாகவே நினைத்ததில்லை "

"மனிதனை பாவி என்று சொல்லாதே "நீ தெய்வம் " என்று அவனிடம் சொல்"


"பசியால் ஒரு "நாய்" வாடினால் கூட அதற்கு உணவளிப்பதே என் மதம் "


"பாவங்களிலேயே மிகப்பெரிய பாவம், "நீ உன்னை பலவீனன்" என்று நினைப்பதே" 

கடலின் ஆழத்தை அளக்கபோகின்ற உப்புப் பொம்மை கடலிலேயே கரைந்துவிடுவது போன்றதே சாதாரண மனிதர்களின் நிலை ...

நீ அறியவேண்டிய தெல்லாம் ஒன்று தான் "உன்னால் எதுவும் முடியும்" "நீ அழியாத பிரம்மம் என்பதுதான்" 


"எந்த வீட்டில் பெண்ணின் ஒரு துளி கண்ணீர் விழுகிறதோ, அந்த வீட்டில் கடவுள் மகிழ்ச்சி அடைவதில்லை; அந்த வீடு நாசம் அடைகிறது " 


"நீ வேண்டுவதை எல்லாம் கடவுள் கொடுத்து விட மாட்டார், உனக்கு என்னத்தேவையோ அவற்றை அனைத்தையும் கொடுத்துவிடுவார் ! " 

பசியால் துடிப்பவனிடம் மதப் பிரச்சாரம் செய்வது அவனை அவமானபடுத்துவதாகும் ! 

"எத்தகைய கல்வி நல்லொழுக்கத்தை உருவாக்குமோ, மனவலிமையை வளர்க்கச் செய்யுமோ, விரிந்த அறிவைத் தருமோ, ஒருவனைத் 
தன்னுடைய சுய வலிமையைக் கொண்டு நிற்கச் செய்யுமோ, அத்தகைய கல்விதான் நமக்குத்தேவை !"     

"மனிதனிடம் அறிவு உறங்கினால், மிருக இச்சைகள் விழித்தெழுந்து குதியாட்டம் போடுகின்றன "

No comments:

Post a Comment