Thursday 16 August 2018

வாழ்க அடல் ஜி யின் புகழ் ! - Atal Bihari Vajpayee - Deep Condolence

பாரதத்தின் பாசத் தலைவனை, 
நெறிபிறழா நேர்மையாளனை,
கார்கிலை வென்றெடுத்த தேசத்தின் காவலனை, 
தங்க நாற்கரச் சாலை தந்த தலைமகனை, 
பார்போற்றும் தேசியவாதியை, 
ஈடு இணையற்ற இலக்கிய வாதியை,  
ஒப்பற்ற ஒழுக்கசீலனை,
மக்களின் தலைவனை,
தொண்டர்களின் வழிகாட்டியை,
ஜன சங்கத்தின் ஜீவாத்மாவை,
பாரதத்தின் பொக்கிஷத்தை,

இன்று இழந்துவிட்டோம் 
வாழ்க அடல் ஜி யின் புகழ் !
என்றும் அவர் வழி நடப்போம் 

அ.பரிவழகன்  

Thursday 2 August 2018

ஆடிப் பெருக்கு ! ஆறுகளைப் போற்றுவோம் ! - Aadi Peruku - The day to Celebrate our Rivers

மனித சமூகம் தோன்றிய காலம் முதல் ஆறுகளே மனித சமூகத்தை மேம்படுத்தின, ஆற்றங்கரை நாகரிகமே உலகின் முதல் வாசல் !. அன்று முதல் நாம் ஆறுகளை வணங்கி, கொண்டாடி வருகிறோம். நம் பாரத நாகரிகத்தில் அனைத்து ஆறுகளுக்கும் பெண் தெய்வங்களின் பெயர்களை வைத்து தேவியரின் அம்சமாகவே வணங்குகிறோம். கங்கை, காவேரி , யமுனை என அனைத்தும் பாரத அன்னையின் பரிணாமங்கள். இன்று ஆடிப்பெருக்கு ஆறுகளைக் கொண்டாடும் நாள், நமக்கு உணவு, விவசாயம், நாகரிகம், பண்பாடு, வாழ்வியல் முறை, குடும்ப அமைப்பு, நகர அமைப்பு, வழிபாடு என அனைத்தும் அளித்துக் காத்து வரும் ஆறுகளை வணங்குவோமாக.

நீர் உலகின் அடிப்படை, எனவே
நீர் நிலைகளைப் பாதுகாப்போம்!  

அ.பரிவழகன்