Wednesday, 22 April 2015

"தாலி" பற்றிய சங்ககாலத் தமிழர் ஆதாரங்கள் ("Thirumangalyam-Thali" Tamil Sangam age Evidences)


             தாலி அகற்றல் புரட்சி அல்ல, சிந்தனை வறட்சி!
                        பத்மன் - தினமணி  - 16.04.2015


 தமிழர்தம் சங்க இலக்கியத்திலே திருமணச் சடங்குகளும் இருக்கின்றன, தாலியும் இருக்கிறது. ஊர் கூடித் திருமணம் நடத்தும் முறை ஏன் வந்தது என்பதற்கு பொய்யும் வழுவும் தோன்றிய பி்ன்னர் ஐயர் யாத்தனர் கரணம்  என்ப (கற்பியல்   - 143) என்ற தொல்காப்பியச் செய்யுள் விடை தருகிறது. 
விருப்பப்பட்ட ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்க்கை முறையிலே தங்களுக்குள் எந்த பந்தமும் இல்லை என்று பொய் கூறி ஏமாற்றுவதும், தவறுகளும் மலிந்துவிட்ட காரணத்தால்தான், கரணம் எனப்படும் திருமண முறையை, சமூகத் தலைவர்கள் கொண்டுவந்தனர் என்பது இதன் பொருள். 
இந்தத் திருமணம் எப்படி நடைபெற வேண்டும் என்பதற்கும் தொல்காப்பியம் விளக்கம் தருகிறது.(கற்பியல் - 140) 
கொளற்கு உரி மரபின் கிழவன் கிழத்தியை
கொடைக்கு உரி மரபினர் கொடுப்ப, கொள்வதுவே. 
மணப்பெண்ணை ஏற்பதற்கு உரிய குடியைச் சேர்ந்த மணமகன், அப் பெண்ணைத் தனக்கு இல்லாளாகத் தருவதற்கு உரிய குடியைச் சேர்ந்தோர் கொடுக்க, ஏற்றுக்கொள்வதே திருமணம் என்கிறது தொல்காப்பியம். 
இவ்வாறாக தகுதியுடைய மணமகனுக்கு, தகுதி உடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டுப் பெண்ணை மணமுடித்துத் தருகின்றனர். அந்தத் தகுதியை எவ்வாறு தேர்ந்தெடுத்தனர்? வீரமுடைய ஆண்மகனுக்கே முதலிடம். ஆகையால் புலியோடு போராடி அதனுடைய பல்லைப் பிடுங்கிக்கொண்டு வந்து, தன் வீரப் பரிசாக பெண்ணுக்குத் தாலியை அணிவித்தான் அக்காலத் தமிழன். பின்னர் உண்மையான புலிப் பல்லைக் கொண்டு வருவது அருகி, பொன்னால் ஆன புலிப்பல், தாலியில் இடம்பெற்றது. ஆகையால்தான், இக்காலத்திலும் தமிழர்களின் தாலியின்  கீழே இருபுறமும் புலிப் பல் போன்ற தோற்றத்துடன் அமையப் பெற்றுள்ளது. 
சங்க காலத்திலே சிறுவர்கள்தான் ஐம்படைத் தாலி அணிந்தார்கள், பெண்கள் தாலி அணிந்ததில்லை என்று கூறுவது திரிபுவாதம். தாலி என்றால் அணியப்படும் கயிறு என்று பொருள். அவ்வகைத் தாலி ஒன்றை அதாவது கயிற்றை, சிறுவர்கள் அணிந்தார்கள் என்பது உண்மையே. அதேபோன்று பெண்களும் மங்கல நாணாகிய கயிற்றை அணிந்திருக்கிறார்கள். 
தமிழ்ப் பெண்கள் தாலி அணிந்ததற்கு ஏது சங்க இலக்கிய ஆதாரம் என்பதற்கு கீழ்வரும் பாடல்கள் விடைதரும். 
அகநானூற்றில் கயமனார் இயற்றிய ஏழாம் பாடலின் வரி  பொன்னொடு புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி”  என்று அமைந்துள்ளது.  பாலைத் திணையில் அமைந்த இந்தப் பாடல், தலைவியைப் பார்த்து செவிலித் தாய் பாடியது. பருவப் பெண்ணின் உடல் மாற்றத்தைக் கூறும் அந்தப் பாடலில், தங்கத்தோடு புலிப்பல் கோத்த ஒளிவீசிய தாலியை தன் மகள் அணிந்திருப்பதாக செவிலித் தாய் பாடுகிறாள். 
அந்தத் தாலி, திருமணமான பெண்கள்  கழுத்தில் அணியும் தாலிதானா என்பதற்கு புறநானூற்றின் 127-ஆவது பாடல் சான்று தருகிறது. அப்பாடல், ஆய் என்னும் குறுநில மன்னனை வாழ்த்தி, புலவர் உறையூர் ஏணிச்சேரி முட மோசியார் பாடியது. 
ஆய் எனும் மன்னனின் கோயில் அதாவது அரண்மனையானது, யாழிசைத்த பாணர்களுக்கு அம்மன்னன் யானைகளைப் பரிசாகத் தந்து விட்டதால், வெறிச்சோடிக் கிடக்கும் யானை கட்டும் தறிகளில் காட்டு மயில்கள் அச்சமின்றி அமர்ந்திருக்கும் வகையிலும், ஆய் குலத்துப் பெண்கள் ஈகையாக கொடுக்க இயலாத மங்கலநாணாகிய தாலி அன்றி வேறு எந்த அணிகலனும் அணியாத நிலையிலும் பொலிவிழந்து காணப்பட்டாலும், மற்ற மன்னர்களின் அரண்மனையைவிட அதுவே உயர்ந்தது என்கிறார் புலவர். ஏனெனில் ஆயின் கொடைத்தன்மை அத்தகையது. அப்படிப்பட ஆய் மன்னனின் வீட்டுப் பெண்களிடம், மற்ற நகைகள் தங்காமல்போயினும், தங்கத்தாலான தாலி மட்டுமே மிஞ்சியிருக்கிறது.  ஏனெனில், கொடை வள்ளல் ஆய் மன்னனாலேயே கொடையாக அளிக்கப்பட முடியாத புனிதம் வாய்ந்தது அந்தத் தாலி என்பதுதானே இதன் பொருள். 
இதோ அந்தப் பாடல் வரிகள்:
          களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப்
     பாடின் பனுவற் பாண ருய்த்தெனக்
     களிறில வாகிய புல்லரை நெடுவெளிற்
     கான மஞ்ஞை கணனொடு சேப்ப
     ஈகை யரிய விழையணி மகளிரொடு
     சாயின் றென்ப வாஅய் கோயில் 
ஈகை அரிய இழையணி மகளிர் என்ற வரிகளை நோக்க வேண்டும். ஈகை அரிய இழை என்பது மங்கல நாணாகிய தாலியைத் தவிர வேறு என்ன? 
(அது இருக்கட்டும், முதலில் தாலி என்ன அடிமைச் சின்னமாஇல்லையில்லை. தமிழர்களின் வீரம் சார்ந்த கலாசாரத்தின் அடையாளம். வீரத்தைக் காட்ட முதலில் உண்மையான புலிப்பல்லைக் கோத்த தாலி அணிவித்த தமிழன், பிறகு புலிநகம் வைக்கும் இடத்திலே பொன்னை வைத்து, தனக்குப் பெண்ணை வைத்துக் காப்பாற்றும் பொருள் பலம் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டினான்.) 
தாலி, ஆணுக்குப் பெண்ணை அடிமையாக்கும் சின்னம் அல்ல, பெண்ணுக்கு ஆண் தரும் காணிக்கை. அதைக் கழுத்தில் அணிவிப்பது, ஆணுக்குப் பெண் அடிமை என்பதைக் காட்டுவதற்கு அல்லவா என்று கேட்டால், விருதுகளையும், விளையாட்டுப் பதக்கங்களையும் தாலிபோல் மாலையாகக் கழுத்தில்தானே இப்போதும் அணிவிக்கிறார்கள்அது என்ன அவமானமா அல்லது கௌரவமா? பதக்கம் அணியப் பெறுபவர்கள் தலைவணங்கி ஏற்றுக்கொள்வது மரபு, இயல்பான செயலும்கூட. இதில் எங்கே வந்தது அடிமைத்தனமும் அவமானமும்? 
அதுபோல, தனது இல்லக் கிழத்தியை கௌரவிக்கும் வகையிலேயே அவளுக்குத் தாலியைக் கழுத்தில் அணிவித்தனர் நமது தமிழ் முன்னோர்கள். இது அவமானம் அல்ல, அடையாளம்.

Saturday, 11 April 2015

இந்து ஆலயங்களும் - அரசுகளும் (Hindu Temples and Governments)



செய்தி :  இந்து கோவில்களில் உள்ள தங்கத்தை வங்கிகள் மூலம் பெற்று, அதற்கு ஈடாக வட்டி அளிக்கும் புதிய திட்டத்தை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. தங்கம் இறக்குமதி செய்வதன் மூலம் செலவாகும் அன்னிய செலாவணியை வெகுவாகக் குறைக்கவும், கடத்தல் தங்கத்தை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

நம் சந்தேகங்கள் :

ஏற்கனவே கோவில் நிலங்களை அரசு முறையாக பராமரிப்பதில்லை, கோவிலையும் சுத்தமாக வைதிருப்பதில்லை, கோவிலுக்குத் தேவையான வசதிகளையும், பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளையும் முறையாகச் செய்து தருவதில்லை, இந்நிலையில் கோவில் தங்கத்தின் மீது இப்பொழுது அரசுக்கு இருக்கும் பார்வை சரியாக இருக்குமா,இயங்குமா ?   

பெரிய கோவில்கள் மட்டுமே சிறப்பாகப் பராமரிக்கப் படுகின்றன, சிறிய கோவில்கள் முதலில் பாதுகாப்பாகவே இல்லை, பராமரிப்பு பற்றி பிறகு பார்க்கலாம்.  

பா.ஜ.க அரசு கோவில்களின் நகைகளை எடுத்து, உருக்கி, வட்டி கொடுத்து,  சிறப்பாக பராமரிக்கின்றது என்று  வைத்துகொள்வோம், நாளை வேறு அரசியல் கொள்கையை கொண்ட அரசு ஆட்சிக்கு வந்தால் நகைகளை அவர்கள் "ஒழுக்கமாக" பாதுகாப்பார்கள், என்று உறுதி கூற முடியுமா  திராவிட கட்சிகளின் ஆட்சியில் நம் தமிழக கோவில்களின் நிலை என்ன ? கோவில் வருமானத்திலே இத்தனை ஊழல் "தங்கமே" கிடைத்து விட்டால் பிறகு என்ன "கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா" என்ற நிலை தான். 

மோடியரசு நகைகளை எடுத்துக் கொள்ளலாம் தவறில்லை ஆனால் நகைகளுக்கு யார் உத்தரவாதம் தருவது ? பா.ஜ.க - மோடியரசு கோவில் விசயத்தில் ஒழுக்கமாக செயல் படலாம், மற்ற மாநில அரசுகள், பா.ஜ.க வுக்குப் பிறகு வரும் அரசுகள் கோவில் விசயத்தில் ஒழுங்காகச் செயல் படுமா ?  

பக்தர்கள் கொடுக்கும் தங்கம் ஆட்சி நடத்த என்றால், அதை மற்ற மதங்களின் வழிபாட்டு தலங்களில் இருந்தும் பெற வேண்டும். முடியுமா உங்களால் ? அதுதானே மதச்சார்பின்மை ! 

ஒரு அரசும் இந்து கோவில்களின் பணத்தை எடுத்து இந்து மதத்தைப் பாதுகாக்க, இந்து தர்மத்தை போதிக்க எந்த முயற்சியும் செய்வதில்லை, மாறாக கோவிலில் இருந்து பணத்தை கொடு, நிலத்தை கொடு , தங்கத்தை கொடு என்று கேட்கின்றனர். 

எத்தனை இந்து கோவில்களின் இணையதளங்கள் செயல் பாட்டில் உள்ளன ?  எத்தனை மாநில அரசுகள் தங்கள் மாநில கோவில்களில் நடக்கும் நிகழ்சிகளை இணையத்தில் பதிவு செய்கின்றன ? 

கோவில்களில் முறையான கழிப்பிட வசதி இல்லை, குளத்தில் குளித்து விட்டு உடைமாற்ற பாதுகாப்பு அறை வசதி இல்லை. இதை எல்லாம் யார் செய்து தருவது ?   

அரசர்கள் அந்தக் காலத்தில் கோவில்களுக்கு நகைகளைக் கொடுத்தனர், ஆனால் இன்று அரசோ நகைகளை கேட்கிறது ! 

பாண்டியனும், சோழனும்,சேரனும் கட்டிய தமிழகக் கோவில்களின் இன்றைய நிலை என்ன ? இன்று அறநிலையத் துரையின் கீழ் இயங்கும் கோவில்களில் இருந்து பெறப்படும் பணம் கோவில்களுக்கு முழுமையாகச் செலவு செய்யப்படுகிறதா ? 

ஊழல் அரசியல் வாதிகளையும், ஊழல் அதிகாரிகளையும் நம்பி எப்படி கோவில் நகைகளை வங்கிகளில் வைப்பது ? சுடுகாட்டு கூரையில் ஊழல்; கார்கிலில் உயரிழந்தவர்களுக்கு கட்டிய வீடுகளில் ஊழல் என்று மக்களின் உணர்வு சம்மந்தப்பட்ட விசயங்களிலே ஊழல் செய்து ருசிகண்ட நம் மக்கள் தலைவர்கள் கோவில் நகைகளை சும்மா விடுவார்களா ? "பாய்சனையே பாயசமாக சாப்பிடும் நம்மவர்களிடம் பாயசமே கிடைத்தால் ? "   

நாட்டின் வளர்சிக்காக கோவில் தங்கத்தை எடுக்கலாம், உருக்கலாம், விற்கலாம் தவறில்லை, நான் அந்த அளவுக்குப்  பிற்போக்குவாதி அல்ல, ஆனால் அதே சமயம், சுதந்திரத்திற்குப் பிறகு இத்தனை ஆண்டுகளில் அரசுகள்  கோவில்களுக்குச் செய்தவை என்ன ?  

கோவிலில் இருந்து பணம் வரவில்லை, கோவிலுக்கு சொந்தமாக நிலம் இல்லை என்றால் எந்த அரசாங்கமாவது கோவிலை நடத்துமா ? 

"கோவில்கள் பணம் கொழிக்கும் இடம், முதலீடு இல்லாத வருமானம் தரும் இடம் என்பதற்காகவே அரசுகள் கோவில்களை நடத்துகின்றன" பணத்திற்காகவே அன்றி பக்திக்காக அல்ல !    

இந்த திட்டத்தில் அரசு வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும், நாடாளுமன்றத்தில் எந்த எந்த கோவில்களில் இருந்து எவ்வளவு நகைகள் பெறப்பட்டன, எவ்வளவு வட்டி கொடுக்கப்படுகின்றன என்பன போன்ற விஷயங்கள் பதிவு செயப்பட வேண்டும். 100 சதவீத வெளிப்படைதன்மை தேவை இல்லையேல் ஆண்டவன் சொத்து அம்போ !  

அரசு எடுக்கப்போவது ஆண்டவன் தங்கம் அல்ல; மக்களின் தங்கம் ! 
கோவில்கள் மக்களின் சொத்து ! அரசுகளின் வட்டிக்கடை அல்ல !  
-பரிவழகன்-


Friday, 27 March 2015

ஸ்ரீ ராம நவமி வாழ்த்துகள்

தமிழ் நாட்டில் ராமன் என்றால் ஏதோ வேற்றுகிரகவாசி போல சிலர் சித்தரிக்கின்றனர், ராமனை ஆரியக் கடவுள் என்றும், தமிழருக்கும் ; தமிழ்நாட்டுக்கும் ராமனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், ராமன் பார்ப்பனர்களின் சாமி என்றும், இன்னும் ஏராளம்... இப்படி தவறான கருத்துகளை பரப்புபவர்கள் தமிழ் இலக்கியங்களைப் படித்துப் பார்த்தால் தெரியும், அதில் எண்ணற்ற இடங்களில் ராமனின் புகழ் பதிவு செயப்பட்டுள்ளது என்று ! தொல்காப்பியம் ; புறநானுறு; அகநானுறு; சிலப்பதிகாரம்; மணிமேகலை; திருப்புகழ்; தேவாரம் என்ன அனைத்திலும் இருக்கிறான் ராமன் ! கம்பராமாயணம் ராமனின் உறைவிடம். ஆழ்வார்கள் ராமனை வணங்கியது நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் வழியாக. 

தமிழ் இலக்கிய, வரலாற்று ஆதாரங்களுடன் ராமனின் புகழை, மகிமையை அறிந்துகொள்ள இந்த காணொளியைக் காண்க. See this video for more information. 

Thursday, 19 March 2015

விவேகானந்தர் ஸ்டைல் !


இக்காலத்தில் நம்மிடையே சில சீர்திருத்தக்காரர்கள் இருக்கிறார்கள். நமது சமயத்தை அவர்கள் சீர்திருத்த விரும்புகிறார்கள். அதாவது, ஹிந்து தேசத்தை மறுமலர்ச்சியடையச் செய்ய, நமது சமயத்தை தலைகீழாக மாற்ற விரும்புகிறார்கள். அவர்களிடையே சிந்திக்கக் கூடியவர்கள் சிலரும் இருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் பெரும்பாலானவர் பிறரைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுகிறார்கள்.

என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் மிகவும் முட்டாள்தனமாக நடக்கிறார்கள். இந்த ரகச் சீர்திருத்தக்காரர்கள் நமது சமயத்தில் அந்நிய நாட்டுக் கருத்துக்களை நுழைக்க வெகு உற்சாகமாக இருக்கிறார்கள். அவர்கள் `உருவ வழிபாடு’ என்ற சொல்லைப் பிடித்துக் கொண்டு விட்டார்கள். “இந்து சமயம் நேர்மையானதல்ல. ஏனெனில் அது உருவ வழிபாடு நடத்துகிறது” என்று துணிந்து பேசுகிறார்கள்.

`உருவ வழிபாடு’ என்று அழைக்கப்படுவது எத்தகையது? அது நல்லதா, கெட்டதா என்று கண்டுபிடிக்க அவர்கள் ஒருபோதும் முனைவதில்லை. பிறரிடமிருந்து கருத்துக்களைக் கடன்வாங்கி, `இந்து சமயம் நேர்மையானதல்ல’ என்று கூச்சலிட்டுத் தாக்க அவர்களுக்குப் போதுமான துணிச்சல் இருக்கிறது.

உருவ வழிபாடு தவறு என்பது புளித்துப்போன பேச்சாகிவிட்டது. ஒவ்வொரு மனிதனும் சற்றும் நிதானித்துப் பார்க்காமல் அதனை உடனே ஒப்புக் கொண்டே வருகிறான். ஒரு சமயம் நானும் அவ்வாறு நினைத்திருந்தேன். அந்தக் குற்றத்துக்குத் தண்டனையாக, எல்லாவற்றையும் விக்கிரகங்கள் மூலம் அநுபவித்து உணர்ந்த ஒருவருடைய திருவடியின் கீழ் அமர்ந்து உபதேசத்தைப் பெற வேண்டியவனானேன். நான் குறிப்பிடுவது ராமகிருஷ்ண பரம ஹம்ஸரைப் பற்றியே.

உருவ வழிபாட்டால் அத்தகைய ராமகிருஷ்ண பரம ஹம்ஸர்கள் உண்டாக்கப்பட்டார்கள் என்றால் உங்களுக்கு எது வேண்டும்? சீர்திருத்த வாதியின் கொள்கைகளா? அல்லது ஏராளமான விக்கிரகங்களா? எனக்குப் பதில் அளிக்க வேண்டும். உருவ வழிபாட்டால் ராமகிருஷ்ண பரமஹம்ஸர்களை உண்டாக்க முடியுமானால் மேற்கொண்டு ஆயிரம் உருவங்களைக் கொண்டு போங்கள். இறைவனருளால் உங்களுக்கு வெற்றி கிட்டட்டும். எந்த வழிமுறை மூலமாவது அத்தகைய சீரிய இயல்பினரை உண்டாக்குங்கள்.

"அவர்கள் விரும்புவது மேலோட்டமான புரட்சி ; நான் விரும்புவது அடி முதல் முடி வரையிலான ஒட்டுமொத்தமான வளர்ச்சி !" இதுதான் விவேகானந்தர் ஸ்டைல் ; இதனால் தானே இவர் இன்றைய இளைய சமூகத்தின் ரோல் மாடல் ! மற்றவர்கள் நம் நாட்டைத் திட்டும் பொழுது ; என் நாடு புனிதமானது ; என் நாடு உலகின் குருவாக மாறும் என்றவர். இங்கு புரட்சியை விட வளர்ச்சியே தேவை என்றவர்.இந்தியாவின் ஆன்மீக வளங்களை உலகறியச் செய்தவர். 

நான் பெருமையோடு சொல்கிறேன்  'என் தலைவன் விவேகானந்தன் ' என்று.   

Friday, 13 March 2015

பன்றிக்காய்ச்சல் பற்றிய ஒரு விழிப்புணர்வு புத்தகம்

                               பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் 
    பன்றிக்காய்ச்சல் வரமால் இருக்க பாதுகாப்பு முறைகள் 


பன்றிக்காய்ச்சல் பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ள
CLICK HERE
http://parivazhagan.blogspot.in/p/swineflu.html

Wednesday, 11 March 2015

கல்வி நம் விருப்பம், நம் உரிமை !

இன்று அனைத்துப் பெற்றோர்களிடமும் தங்களுடைய பிள்ளை பொறியியல் படிப்புப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதுஇதில் தவறில்லை ஆனால் அதே சமயம் தங்களுடைய பிள்ளைகளின் விருப்பத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

"பக்கத்துவீட்டு உறவினர் மகள்எதிர்வீட்டு அத்தையின் மகன்,சித்தப்பாவின் பையன்,ஒன்றுவிட்ட மாமாவின் மகன்" பொறியியல் படிக்கிறார்கள் என்பதற்காகத் தங்களுடைய பிள்ளையும் பொறியியல் படித்தே ஆகா வேண்டும் என்பது சரியல்லவலுக்கட்டயமாக அவர்களைப் பொறியியல் படிக்க அனுப்பக்கூடாது.

to read full article click here...

இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள்

நம்நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் நம் மக்களின் படிப்பறிவு எழுத்தறிவு விகிதாச்சாரம் மிக குறைவாகவே இருந்ததுஅந்த சமயத்தில் இலவசங்கள் வழங்கப்பட்டனஆனால் இன்று கல்வியின் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரிந்துவிட்டதுநம் மக்களிடம் படித்தோர் எண்ணிக்கை வளர்ந்து விட்டதுஇதுபோன்ற சமயத்தில் இலவசம் என்று கூறி சில காலம் மட்டும் பயன்தரும் இலவச திட்டங்களைப் புகுத்த முடியாதுதரமற்ற பொருட்களை இலவசமாக வாங்கினால் மக்கள் எளிதில் அதைக் கண்டுபிடித்து விடுவர்எனவே தவறான இலவச திட்டங்களை இப்பொழுது மக்கள் முன் கொண்டு செல்ல முடியாது.

இலவச திட்டங்களின் மீது சொல்லப்படும் முதல் குற்றச்சாட்டு அவை சோம் பேறித்தனத்தை வளர்க்கும் என்பது இலவசதிட்டங்கள் தொடர்ந்து வருவதால் அனைவருமே அதை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்பின் இது "வரமாக" மாறிவிடுவதால் அனைத்தும் இலவசமாக கிடைக்காத என்ற ஏக்கம் இதன் விளைவு உழைக்க மறுப்பது இதன் தாக்கம் இன்று தேர்தல் நேரங்களில் பணத்திற்காக தங்கள் ஓட்டுகளையும் மக்கள் விற்கும் அளவிற்கு வளர்ந்து விட்டது.

to read full article click here ...
http://parivazhagan.blogspot.in/p/blog-page_44.html

Sunday, 18 January 2015

LAYOFF in IT Industry


ஐ.டி, மென்பொருள், நிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கை (LAYOFF) 

இவர்களுக்கு தேவை என்றால் 2000, 4000 என்ற எண்ணிகையில் ஆட்களை எடுத்து வேலை வாங்குவார்கள், வேலை முடிந்தவுடன் ஏதோ ஒரு காரணம் சொல்லி ஒரே நாளில் வேலையை விட்டு நீக்கிவிடுவார்கள்...
அனுபவம் பெற்ற ஒருவருக்குக் கொடுக்கும் மாத சம்பளத்தில் புதிதாக மூன்று, நான்கு பேருக்கு மாத சம்பளம் கொடுத்து அதிகமான நபர்கள் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள்; அதிகமான நபர்களுக்கு புதிதாக நாங்கள் வேலை வழங்கி இருக்கிறோம் என்று விளம்பரம் செய்வார்கள். 
ஐ.டி நிறுவனங்களால் பல சாதாரண, நடுத்தர குடும்பங்கள் இன்று முன்னேறி இருப்பது உண்மையே அதேசமயம் அதன் தவறுகளையும் சுட்டிக்காட்ட வேண்டும். 35, 40 வயதுக்கு மேற்பட்டோரை அதிரடியாக வேலையை விட்டு நீக்கும் பொழுது அவர்களை நம்பி இருக்கும் குடும்பம் துன்பப்படுகிறது. பலரது எதிர்காலம் கேள்விக்குள்ளாகிறது.
இவற்றை ஐ.டி நிறுவனங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

Friday, 9 January 2015

இலங்கையின் புதிய அதிபர் சிறிசேனா ...

இலங்கையில் திரு மைத்ரிபால சிறிசேனா வின் வெற்றி வாழ்த்துக்குரியது அதே சமயம் இலங்கையில் உள்ள நம் தமிழ் மக்களுக்கு அவர் ஒரு நல்ல வாழ்கைத் தரத்தை, சம உரிமையை, பாதுகாப்பான சூழலை, மத இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசை...அதிகாரப் பகிர்வு சாத்தியமா ? நிதி,நீதி,காவல்,இராணுவ அதிகாரங்கள் தமிழர்களுக்கு கிடைக்குமா ? செய்வாரா சிறிசேனா ? பொருத்திருந்து தான் பார்க்கவேண்டும். நல்லவைகள் நடக்கும் என நம்புவோம்.

Friday, 2 January 2015

Shutdown Wine shops on January 12 !

சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் அன்று மதுக்கடைகளை மூட வேண்டும் !  
Click here and share your thoughts
Shutdown Wine Shops on January 12 !

இளைஞர்களின் வழிகாட்டி "சுவாமி விவேகானந்தரின்" பிறந்த நாள் ஜனவரி 12 அன்று இளைஞர்களை சீரழிக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் !

NATIONAL YOUTH DAY...SWAMI VIVEKANANDA BIRTHDAY ! 




Monday, 15 December 2014

" மாதங்களில் நான் மார்கழி "

" மாதங்களில் நான் மார்கழி "
- ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா-
(ஸ்ரீ மத் பகவத் கீதை - 10:35) 

தொடங்கிவிட்டது மார்கழி மாதம் ! (இன்று முதல் -16.12.2014)
கோதை நாச்சியார் ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை 


        "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து
ஓங்கு பெறும் செந் நெல் ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்" (3 வது பாடல் )

பொருள்:வானம் வரை உயர்ந்து மூவலுகம் அளந்த உத்தமனின் பெயரை உச்சரித்து நாங்கள் நம் பாவை நோன்பிற்காக ஒன்றுபட்டு நீராடினால், வறுமை என்னும் தீங்கு ஒழியும் வண்ணம் மாதந்தோறும் மும்மாரி பெய்து அதனால் ஓங்கி வளர்ந்த செந்நெற் பயிர்களுக்கு நடுவே கயல்கள்(மீன்கள்)துள்ளி விளையாடவும், அழகிய குவளை மலரில் ஒளியுடைய வண்டுகள் உறங்கவும், கொட்டகையில் அசையாமல் ஓரிடத்தில் நின்று, பருத்த முலைகளை இருகைகளாலும் பற்றி (இடையர்கள்) குடம் குடமாக பால் கறக்கும் வள்ளல் தன்மை உடைய பசுக்களும், நீங்காத செல்வமும் நிறைந்திருக்க நாம் பாவை நோன்பு மேற்கொள்வோம்.

ஒருநாளின் ஒவ்வொரு மணித்துளியும் இறைவணக்கத்துக்கு உகந்தது என்றாலும் குறிப்பிட்ட நாழிகைகளை மட்டும் இறைவனுக்கென்றே ஒதுக்கியிருப்பார்கள். அதிகாலை நான்கு முதல் ஆறு மணி வரை இறைவணக்கத்துக்காகவே அர்ப்பணிக்கப்பட்ட நேரம்.

புள்ளினங்கள் கவிபாடி உலகத்தைத் துயிலெழுப்பும் அதிகாலை, அற்புதமானது. மனதில் சலனங்கள் ஏதுமின்றி இறைவனோடு ஒன்றுவதற்கு ஏற்ற பொழுது, இதைவிட வேறென்ன இருக்கமுடியும்? அதனால்தான் அந்த அதிகாலைப் பொழுதை ‘பிரம்ம முகூர்த்தம்’ என்று முதன்மைப்படுத்தினார்கள்.

நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். தை மாதம் தொடங்கி ஆனி வரை அவர்களுக்குப் பகல் பொழுதாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி வரை இரவுப்பொழுதாகவும் அமையும். அப்படிப் பார்க்கும்போது அதிகாலையான பிரம்ம முகூர்த்தம் மார்கழியில்தான் வருகிறது. தேவர்களுக்கே பிரம்ம முகூர்த்தமாக இருக்கிறபடியால், மார்கழி மாதம் மானிடர்களுக்கும் சிறந்ததாகிறது. அந்த மாதத்தில் உலக நாட்டங்களைக் குறைத்து, இறைவனிடமும் அவர் திருவடி சார்ந்த செயல்பாடுகளிலுமே மனம் ஒன்ற வேண்டும் என்பதற்காகத்தான் வேறெந்த நிகழ்வுகளையும் நடக்காமல் பார்த்துக் கொண்டார்கள். அதன் வழியொட்டியே மார்கழியில் சுப நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதேநேரம் இறைவனிடம் மனம் ஒன்ற வேண்டும் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.

மார்கழியில் அதிகாலை துயிலெழுவதும், வாசல் தெளிப்பதும் மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் புத்துணர்ச்சி தரும். சூரியனிடம் இருந்து வருகிற ஓசோனின் தாக்கம் மார்கழி அதிகாலையில் நல்லவண்ணமாய் இருக்கும். அதிகாலையில் வெளியே வருவதால் அந்தக் காற்றும், கதிரும் உடலை வன்மைப்படுத்தும்.

மார்கழியில் சுபநிகழ்வுகளைத் தவிர்ப்பதற்காக இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. குடியானவர்கள், தை மாதத்தில் வருகிற பொங்கலுக்குத் தேவையான தானியங்களையும், கரும்பு, மஞ்சள் முதலான பொருட்களையும் அறுவடை செய்து வீடுகளுக்குக் கொண்டுவரும் பணியில் மார்கழி மாதம் முழுவதும் செலவிடுவார்கள். அதனால் அந்த மாதத்தில் சுப நிகழ்வுகளுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் இருந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் சுபநிகழ்வுகளைத் தவிர்த்த மக்கள், இறைவழிபாட்டுக்கு அதிக நேரம் ஒதுக்கியிருப்பதும் இந்த மார்கழி மாதம்தான்.
"காதலன் கண்ணனையே கணவனாகப் பெற்ற பக்தை ஆண்டாள்" 
ஆண்டவனையே அன்பால் ஆண்டதால் கோதை நாச்சியார் 
"ஆண்டாள்" என்று அழைக்பெற்றார்


விவசாயத்தை வளர்ப்போம் !

விவசாயிகள் தற்கொலை விண்ணில் அறுவடை செய்யவா ? 
விவசாயத்தை வளர்ப்போம் !
விவசாயியை போற்றுவோம் ! 

Thursday, 11 December 2014

ஜுன் 21 சர்வதேச யோகா தினம் ! June 21 International day of Yoga !

பிரதமர் மோடி வலியுறுத்தியதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. அறிவித்து அதற்கான தீர்மானம் பொதுச்சபையில் நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் பிரதமரின் கோரிக்கையை ஐ.நா. நிறைவேற்றியுள்ளது மட்டுமல்லாது. யோகாவிற்கும் சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது !

ON behalf of INDIA Prime Minister Narendra modi request UN to declare June 21 as International day of Yoga, with support from majority of 175 nations, UN Declared June 21st as International day of Yoga !

Wednesday, 10 December 2014

வாழ்த்துகள்...Congrats...

வாழ்த்துகள் நோபல் பரிசு வென்ற "Kailash Satyarthi " மற்றும் 
"Malala Yousafzai"அவர்களுக்கு ... 
Congrats for Nobel Prize 2014 Winners - The Nobel Peace Prize 2014