Tuesday, 15 July 2014

வேண்டும் "வேத அறிவியல்"

நம்முடைய வேதங்களில்,உபநிதங்களில்,புராணங்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள், அறிவியல் சார்ந்த கருத்துகள்,அறிவியல் சார்ந்த விளக்கங்கள் முதலியனவற்றை நம்முடைய பள்ளிப் பாடப் புத்தகத்தில் சேர்த்தல் வேண்டும். 

இதன் மூலம் நம் முன்னோர்கள் விட்டுப்போன அறிவியல் ஆய்வுகளை நம் இளையதலைமுறை மேற்கொள்ள வசதியாக இருக்கும்.நம் நாட்டு ரிஷிகளும்,அறிவுஜீவிகளும் கண்டுபிடித்த விஷயங்கள் நமக்குப் பயன்படும்,அது நமக்கு பெருமையாகவும்,பயனுள்ளதாகவும் அமையும். 

இன்று பெரும்பான்மையான மக்கள் யாரும் வேதங்களைப் படிப்பதில்லை (ஏன் ஹிந்துக்கள் இன்று பகவத் கீதையைக் கூட யாரும் ஒழுங்காகப் படிபதில்லை)அதில் இருக்கும் கருத்துகள் நமக்குப் தெரியாமலேயே இருந்து விடுகிறன.அவை குறிப்பாக சமஸ்கிருதத்தில் இருப்பதால் நாம் யாரும் அதைப்படிப்பது இல்லை. இதற்கு ஒரே தீர்வு நம் பள்ளிப் பாடப் புத்தகத்தில் அறிவியல் பாடத்தில் "வேத அறிவியல்" என்று நம்முடைய  முன்னோர் நமக்கு வழங்கிய கொடையான வேதங்களை நம் இளையதலைமுறை மாணவர்களிடம் கொண்டுசெல்ல வேண்டும். 

"பிற மொழியில் இருக்கும் நல்ல நூல்களை, தமிழில் மொழிமாற்றம் செய்தல் வேண்டும்" என்றரர் தேசிய கவி பாரதி, அதற்கேற்ப சமஸ்கிருதத்தில் இருக்கும் அறிவியல் கருத்துகளை தமிழில் மொழிமாற்றம் செய்தல் வேண்டும். 

சம்ஸ்கிருத அறிவியலை புறம் தள்ளிவிட்டு "பகுத்தறிவு" பேசி என்ன பயன் ?   

Tuesday, 8 July 2014

நாம் செய்யவேண்டிய "ஐந்து"

பொறியியல் கல்லூரி மாணவர்களிடம் சமூக அக்கரைக் குறைவு என்ற வாதம் எழுகிறது இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நாம் கடுமையாக உழைக்கவேண்டும், ஒரு பொறியியல் கல்லூரியின் முனைவர்பட்ட ஆய்வு (PhD) மாணவன் என்றமுறையில், இன்று பொறியியல் கல்லூரி மாணவர்கள் செய்யவேண்டிய "ஐந்து" செயல்களாக நான் நினைப்பது... 
  • தினந்தோறும் நாளிதழ் படிக்கவேண்டும். சமூக வலைதளங்களில், இந்த சமூகத்திற்கு ஏற்ற நல்ல கருத்துகளைப் பதிவிட வேண்டும். நம்மைச்  சுற்றி நல்ல கருத்துகள் உலவ வேண்டும். 
  • இந்தியாவின் வரலாறு, உலக நாடுகளின் வரலாறு, நம் தேசத்தலைவர்களின் வரலாறு ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.நல்ல புத்தகங்கள் படிக்கவேண்டும்.
  • தினந்தோறும் நண்பர்களிடம், குடும்பத்தினரிடம், ஒரு பதினைந்து நிமிடமாவது நாட்டு நடப்புகளைப்பற்றி, அரசியல் நிகழ்வுகள் பற்றி  விவாதிக்க வேண்டும்.
  • சமூக சிந்தனை வேண்டும், நம்முடைய கல்லூரியிலோ, நகரிலோ, ஊரிலோ நல்ல சித்தனை கொண்ட ஒரு குழுவான மக்களோடு இணைந்து நம் பகுதியின் முன்னேற்றத்திற்குச் சமூக அக்கறையோடு செயல் பட வேண்டும்.நாட்டின் வளர்ச்சியில் நம்முடையப் பங்கும் இருக்க வேண்டும்.
  • நம்முடைய நேரத்தைப் பயனுள்ள விஷயங்களில் நம் முன்னேற்றத்திற்கு ஏற்றக் காரியங்களில் செலவிட வேண்டும். மக்கள் பிரச்சனைகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். நம் நாட்டின் கலாச்சாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.
    Engineering Students Social Duty

Wednesday, 25 June 2014

தமிழ் நம் அடையாளம்! ஹிந்தி இன்றைய தேவை !

அந்நிய மொழியாகிய ஆங்கிலத்திற்கு நாம் தரும் முக்கியதுவத்தை ஏன் நம் நாட்டு ஹிந்தி மொழிக்குத் தரக்கூடாது ? இந்திய மக்களாகிய நாம் நம் இந்தியாவின் பிற பகுதிகளில் பெருவாரியாக மக்கள் பேசும் ஒரு மொழியை ஏன் கற்கக் கூடாது ? பிற மாநிலங்களுக்கு தொழில், கல்வி, பயணம் ரீதியாக செல்லும் நமக்கு ஹிந்தி பயன்படும். இன்று தமிழ்நாட்டில் படித்த மாணவர்கள்,இளைய சமுதாயத்தினர் தமிழில் எழுதுவதில்லை, பேசுவதில்லை, காரணம் ஆங்கிலமோகம் ! ஒரு அந்நிய மொழியின் (ஆங்கிலம்) மீது மோகம் வரலாம்,அதை யாரு கேட்பதில்லை ! நாம் ஹிந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல, ஒரு மொழியைக் கற்பதனால் இன்னொரு மொழி அழியும் என்பதும் தவறு. 

பல மொழி பேசும் மக்கள் வாழும் நாட்டில் ஒரு மொழியின் மூலம் மட்டும் அரசு, தன் அதிகாரப்பூர்வ செய்திகளை, தன் அரசு நடவடிக்கைகளை மக்களிடம் சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவிக்க,வெளியிட நினைப்பது தவறு. இணைப்பு மொழியாக பயன்படும் ஆங்கிலம் மூலம் அரசு தன் செய்திகளை தெரிவிக்கலாம்.

அவரவர்க்கு அவரவர் மொழி முக்கியம் !

தொன்மை வாய்ந்த தமிழ்மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் ! அரசியல் சாசனத்தின் 8-ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மொழிகளையும் இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆக்க வேண்டும். இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், சமூக வலைதளங்களில் அனைத்து ஆட்சி மொழிகளையும் பயன்படுத்துவதை ஊக்குவிக்க முடியும்.

Saturday, 17 May 2014

வாஜ்பாயின் கனவு திட்டமான நதி நீர் இணைப்பைப் புதிய பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றுவார ?

வருங்காலத்தில் இந்தியா சந்திக்கப்போகும் பிரச்சனைகளில்ஒன்றுமிக முக்கியமானதுகுடி நீர் பற்றாக்குறைஇதைத்தடுக்க நம்மிடம் எந்த ஒரு ஆக்கப்பூர்வமான திட்டமும்இதுவரை இல்லை.

நம் தமிழக முதல்வர் மரியாதைக்குரியசெல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின்  முந்தய ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மழை நீர் சேமிப்பு திட்டம் ஒருவரப்பிரசாதமான திட்டம் , நிலத்தடி நீரை சேமிக்க ஒருசிறப்பான திட்டம்ஆனால் இது மட்டும் போதாதுநம்நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் குடிநீர்,தண்ணீர்,பற்றாக்குறையைப் போக்க இந்தியாவில் உள்ள முக்கியநதிகளை இணைக்க வேண்டும்.


பெருந்தலைவர்மரியாதைக்குரிய அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின்ஆட்சிக் காலத்தில் யோசிக்கபட்ட "கங்கை காவிரி இணைப்புத் திட்டம் " செயல் படுத்தப்பட வேண்டும்இந்தியாஒன்றும் நீர் வளம் இல்லாத நாடு இல்லை,  


நம்முடைய உடம்பில் இருக்கும் நரம்புகளைபோல்இன்றியமையாதது நம்முடைய "தேசமாகியஉடம்பில்இருக்கும் நதிகள்இந்த நதிகளைப்  பாதுகாக்க வேண்டும்,வீணாகக் கடலில் சென்று கலக்கும் நதி நீரை ஒரு சிறுபகுதியை திருப்பி மற்ற நதிகளுடன் இணைத்து இந்தியாமுழுவதும் நதிகளை உலாவவிட்டு நம்முடைய நீர்ஆதாரத்தைப் பெருக்க வேண்டும்.


நதி நீர் இணைக்கப்பட்டால் பல நன்மைகள் உண்டாகும்குறிப்பாக நிலத்தடி நீர் மட்டம் உயரும்சுத்தமான நீர்கிடைக்கும்,விவசாயம் செழிக்கும்,முக்கியமாக மக்களின்குடிநீர்ப் பிரச்சனை தீரும்,கோடை காலத்தில் குடிநீர்தட்டுப்பாடு ஏற்படாது,கோடை காலத்தை சமாளிக்கும் அளவுநீர் வளம் பெருகும்கோடை காலத்தில் கூட விவசாயம்செழிப்பாக வளரும்.

ஆறுகளின் அவசியத்தை உணர்ந்துதான் நம் முன்னோர்"ஆறில்லா ஊர் பாழ்என்றனர்அனால் இன்றோ ஆற்றுநீரை நாம் பயன் படுத்தாமல் பாழ்படுத்திகொண்டுஇருக்கிறோம்.

மழை பொழியும் அளவு வேற ஆண்டிருக்கு ஆண்டுகுறைந்து கொண்டே வருகிறதுநிலத்தடி நீரும் வற்றிவருகிறதுஇந்த நேரத்தில் நதிகளை நாம் சரியாககையாளாவிட்டால் ஆபத்து நமக்குதான்நம்முடைய மக்கள்தொகைக்கு ஏற்றார் போல் நம்முடைய நீர்வளத்தைப்பெருக்க வேண்டும்இல்லையேல் இது பஞ்சத்தில் கொண்டுபோய்விடும்நீர் ஆதாரம் வற்றி வரும் வேளையில் நாம்கையில் இருக்கும் முக்கியமான நீர் ஆதாரம்வளம்நம்முடைய ஆறுகள் அதை வீணாக்கலாமா ?

அணைத்து நதிகளில் இருத்தும் ஒரு சிறு பகுதியை திருப்பிஒரு தேசிய நீரோட்டத்தை உருவாக்க வேண்டும் அந்தத்தேசிய நீரோட்டம் இந்தியா முழுவதும் பயணிக்க வேண்டும்,இது சாதாரண காரியம் அல்லமிகுந்த பொருட்ச்செலவும்,நேரமும் தேவைப்படும் எனினும் இதன் பலன்கள்மிகுதியானவைஇத்திட்டத்தை நாம் செய்துதான் ஆகாவேண்டும்.
நதிநீர் இணைப்பு என்பது ஒரே நாளில் நடக்கும் காரியம்அல்லஅதற்குத் தெளிவான ஒரு கட்டமைப்புச் செயல்திட்டம் வேண்டும்தமிழகத்தில் போடப்பட்ட மழைநீர்சேமிப்புத் திட்டம்இந்தியா முழுவதும் செயல் படுத்தப்படவேண்டும்.
மோடி நதிநீர் இணைப்பை செயல் படுத்துவார?இல்லையேல் குடி நீருக்கும் வெளிநாட்டிடம்கையேந்தும் நிலை தான் வரும்.

பிரதமர் நரேந்திர மோடி வாஜ்பாயின் கனவு திட்டமான நதிநீர் இணைப்பை நிறைவேற்றுவார ?ராமநாதபுரத்தில் தேர்தல் பரப்புரையின் போது நரேந்திரமோடி அறிவித்தது போல கங்கை காவிரி நதி நீர்இணைப்பை செயல் படுத்துவாரகாலம் தான் பதில்சொல்லும்.     

Tuesday, 29 April 2014

வரப்போகும் புதிய அரசாங்கத்திடம் நான் வைக்கும் கோரிக்கைகள்/என் விருப்பம்...

இந்தியாமுழுவதும் சோலார் தகடு மூலம் மின்சாரம்.படிப்படியாக அனுமின்சாரத்தைக் கைவிடல். (Solar Energy).

இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் 24 மணி நேரமும் தொடர் மின்சாரம் வழங்குதல்.

தேசப் பாதுகாப்பில் தீவிர கவனம்.

முறையான பொருளாதாரக் கொள்கை.அண்டை நாடுகளுடன் எச்சரிக்கையாக இருத்தல், அவர்களுடன் நல்லுறவை வளர்த்தல்.

குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண கங்கை காவிரி இணைப்புத் திட்டம் செயல்படுத்தல்.நாட்டின் நீர்வளங்களைப் பாதுகாத்தல்.நிலத்தடி நீர்மட்டத்தை உயர்தல்.

விவசாயத்திற்கு முன்னுரிமையளிதல்.வன வளங்களை,இயற்கை வளங்களைப் பாதுகாத்தல்,அனைத்து மாநிலத்திலும் கட்டயமாக மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைச் செயல்படுத்தல்.  

ஊழலுக்கு எதிராக கடுமையான சட்டம், ஊழலில் ஈடுபடுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை.

பிளாஸ்டிக் பொருட்களின் மீது கவனம் செலுத்தி, அதன் பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுத்தல்.  

தமிழக மீனவர் நலனில் அக்கரை, பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு.

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் உறுதியான முடிவு, அவர்களின் வாழ்வாதாரத்தில் அக்கரை செலுத்துதல்.

பரிவழகன்


Thursday, 27 February 2014

எதிர்த்து நில்; உறுதியாக !


ஒருபுறம் குளம்மறுபுறம் உயரமான சுவர்வாராணசியில் அவற்றின் இடையே சாலையில் நடந்துகொண்டிருந்தார் விவேகானந்தர்பின்னால் ஏதோ சப்தம்திரும்பிப் பார்த்தார்பத்துப் பதினைந்து குரங்குகள் அவரைத் துரத்தி வந்தனஇப்போது என்ன செய்வது?

குரங்குகளிடமிருந்து தப்பிப்பதற்காக வேகமாக ஓடத் தொடங்கினார்குரங்குகள் அவரை விடுவதாக இல்லைஅவையும் கன வேகமாக ஓடி அவரைத் துரத்தினதிடீரென்று ஒரு குரல் கேட்டதுமுன்னே சென்ற ஒருவரின் குரல்தான் அது...   

"குரங்குகளைக் கண்டு ஓடாதேஎதிர்த்து நில்உறுதியாக அவற்றை நோக்கி முன்னேறுபிறகு என்ன நடக்கிறது என்று பார்?''

விவேகானந்தர் அந்தக் குரல் சொன்னபடியே செய்தார்குரங்குகளின் பக்கம் திரும்பி எதிர்த்து நின்றார்குரங்குகள் திகைப்புடன் செயலிழந்து நின்றன.  பின்னர் மெல்ல குரங்குகளை நோக்கி உறுதியோடு நடந்தார் விவேகானந்தர்அவை அவரைத் தொடரவில்லைஅச்சத்தோடு தயங்கி நின்றனமெல்லப் பின்வாங்கினபிறகு அவரைவிட்டு வேகமாக ஓடி மறைந்தன.

விவேகானந்தர் எழுதுகிறார்: "இளைஞனேஅந்தக் குரங்குகள் எல்லாம் உன் வாழ்க்கையில் வரும் சோதனைகளேசோதனைகளைக் கண்டு அஞ்சி ஓடினால் அவை துரத்தும்.

தைரியமாக அவற்றை நேருக்குநேர் எதிர்கொண்டால் சோதனைகள் விலகி ஓடிவிடும்சோதனைகளைக் கண்டு அஞ்சாதேசோதனைகளுக்கு அச்சம் ஏற்படும் வகையில் எதிர்த்து நின்று வெல்வாயாக!''


விவேகானந்தர் மூளை பலம் மட்டுமல்லஉடல் வலிமையும் வேண்டும் என்கிறார்.'நாள்தோறும் கால்பந்து விளையாடுகீதை உனக்கு இன்னும் நன்றாகப் புரியும்என்று சொன்னவர் அல்லவா


அவர் சொற்கள் மந்திர சக்தி நிறைந்தவைஒவ்வோர் இளைஞனும் நினைத்து நினைத்துத் தன்னைச் செதுக்கிக் கொள்ளப் பயன்படும் உளிகளாக அவரது வார்த்தைகள் உருக்கொள்கின்றனஇன்றைய இளைஞர்கள் பின்பற்றுவதற்காக விவேகானந்தரது பொன்னான கருத்துகள் காத்திருக்கின்றன.

Wednesday, 26 February 2014

மென்பொருள்...

இன்று மென்பொருள் நிறுவனங்களில்(சாப்ட்வேர்) பணி புரியும் பெண்களின் பாதுகாப்பு  குறித்து சிந்திக்கும் நேரம் இது...

பொதுவாக நடுத்தர வர்க்க மக்கள் தான் இந்த மென்பொருள் நிறுவனங்களில் அதிகமாக பணிபுரிவதால், இந்த நிறுவனங்களில் எந்த பிரச்சனை வந்தாலும் இவர்கள் தங்களின் குடும்பத்திற்காக அவற்றை சகித்துக் கொள்கின்றனர்,இதனால் தங்களுக்கு இருக்கும்,எற்படும்  ஆபத்தை கூட உணராமல் இருகின்றனர்.

மென்பொருள் நிறுவனங்களில் இரவு நேர சிப்டில் பணிபுரியும் அனைவரும் தங்களுக்கென்று வழங்கப்படும் வாகனத்தில் (cab) பயணம் செய்வது நல்லது...நிறுவனங்களும் தங்களின் ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பை வழங்க வேண்டும்.

இனியாவது நாம் பெண்களின் பாதுகாப்பில் போதிய கவனம் செலுத்த வேண்டும்.

Friday, 21 February 2014

வேண்டாம் பிளாஸ்டிக்... Save Earth From Plastics...


வருங்காலத்தில் உலகம் குறிப்பாக இந்தியா சந்திக்கப்போகும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று சுகாதார சீர்கேடு...

இன்று "அணுகுண்டை விட ஆபத்தானதாக மாறிவிட்டது பிளாஸ்டிக் குப்பை" நாம் அனைவரும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகிறோம் இதனால் வரப்போகும் தீமையை அறியாமல் இருக்கிறோம், நம் வீட்டில் அலுவலகத்தில் இருந்து தினமும் வெளியேறும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் எங்கு செல்கின்றன என்பது நமக்குத் தெரியாது அனால் ஒன்று மட்டும் நிச்சயம் இந்த பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணில் மக்க 1000 ஆண்டுகள் ஆகும். 

நாம் ஒவ்வருவரும் நம்முடைய வருங்கால சந்ததியினருக்கு ஒரு நல்ல ஆரோக்கியமான பூமியை விட்டு செல்கிறோமா? சிந்திப்பீர்...தவறு நம் அனைவரின் மீதும் உள்ளது...

Say No To Plastics... 

Thursday, 2 January 2014

"மறைநீர்"


ஒரு பொருளை தயாரிக்க, உற்பத்தி செய்ய எவ்வளவு நீர் (water) தேவைப்படுகிறதோ அதை "மறைநீர்" என்பர். பல நாடுகள்  "மறைநீர்" அளவை அறிந்தே தங்கள் நாட்டில் பொருள்களை உற்பத்தி செய்கின்றன... ஆனால் நம்மிடம் அதன் விழிப்புணர்வு இல்லை...


ஒரு கிலோ அரிசி என்பது 2500 முதல் 3000 லிட்டர் தண்ணீருக்குச் சமம். ஒரு கிலோ அரிசியை உருவாக்க இந்தளவு தண்ணீர் தேவைப்படுகிறது என பொருள். அந்தளவு நீர் அரிசியில் மறைந்துள்ளது.1.1 டன் எடையுள்ள காரை, உற்பத்தி செய்ய 4 லட்சம் லிட்டர் தண்ணீர் மறைநீராக உள்ளது. ஒரு ஜீன்ஸ் பேன்ட் தயாரிக்க 10 ஆயிரம் லிட்டர் மறைநீர் தேவை. 


ஒரு கிலோ அரிசியும் 3000 லிட்டர் தண்ணீரும் ஒன்றா...
ஒரு காரும் 4 லட்சம் லிட்டர் தண்ணீரும் ஒன்றா...
ஒரு ஜீன்ஸ் பேண்டும் 10 ஆயரம் லிட்டர் தண்ணீரும் ஒன்றா...

பல பன்னாட்டு நிறுவனங்கள் அதிகமாக தண்ணீர் (மறைநீர்) தேவைப்படும் பொருள்களை, தொழிற்சாலைகளை நம் நாட்டில் நிறுவி இருப்பது இதன் காரணமாகத் தான். 
ஆதிகமாக மறைநீர் தேவைப்படும் பொருள்களை இனி இறக்குமதி செய்யலாம், குறைவான மறைநீர் தேவைப்படும் பொருள்களை நாம் உற்பத்தி செய்யலாம்.நீரின் வளம் குறைந்து வரும் இந்நாட்களில், நீரின் அளவை அறிந்து இனி நாம் பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.


இனியாவது நீரின் அளவை குறைவாக பயன்படுத்தும் தொழிற்சாலைகளை காட்டுவோம் , குறைவான நீரை உட்கொள்ளும் பொருள்களை உற்பத்தி செய்வோம், நாட்டின் நீர் வளம் காப்போம்...



தண்ணீரின் அவசியத்தை இனியாவது நாம் புரிந்து கொள்ள வேண்டும்...


Wednesday, 13 November 2013

இனியாவது விதைப்போம்... நல்ல விதைகளை...


  • இன்று பெண்கள் மீது நடக்கும் பாலியல் ரீதியான குற்றங்களுக்கு மிக முக்கிய காரணமாக மது அமைந்திருக்கிறது,இனி வரும் காலங்களில் மதுவினால் நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகமாகுமே தவிற குறையாது...இன்று நம் நாட்டில் நடக்கும் அனைத்து விதமான முக்கிய விழாக்களில்,பார்டிகளில் மது ஏதோ இன்றியமையாத பொருள் போல கலந்துவிட்டதுஇதன் விளைவு இனி வரும் நாட்களில் மிக மோசமான சம்பவங்களை நமது சமூகத்தில் விதைக்கும்மாணவர்களிடம் மதுவின் தாகம் தாகம் அதிகமாகி வருகிறதுஇந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம் என்று நாம் பெருமைப்  பட்டுக்கொண்டலும்பெருவாரியான இளைஞர்கள் இன்று எந்தப்  பாதையில் செல்கிறார்கள் என்பது தான் இப்பொழுது முக்கியம்...புத்தகம் இருக்கவேண்டிய கையில் இன்று மதுக் குவளைபேனா பிடிக்க வேண்டிய விரல்களில் இன்று சிகிரட் என மாறி வருகிறது இந்த சுபாஷும்,விவேகானந்தரும்,காந்தியும்,பாரதியும் பிறந்த நாடு.
  • நம் வீட்டில் இருக்கும் குப்பைகளை சுத்தம் செய்ய முடியாத நாம்தான்...நாட்டில் இருக்கும் குப்பைகள் பற்றி  குறை கூறுகிறோம்...
    ஏவனோ ஒருவன் கொடுக்கும் பணத்திற்காக விஸ்வாசமுடன் விடிய விடிய  வேலை செய்கிறோம், நம்மை 25 ஆண்டுகள் பாதுகாத்த,பணம்கொடுத்த,நாம் மீது உண்மையான அன்பை பொழிந்த,அம்மா அப்பா என்ற இரு ஜீவன்கள் ஏதேனும் சொன்னால் மட்டும்  கோபம் வருகிறது நமக்கு...நம் கோபத்தை மற்றவர்கள் மீது காட்டமல்,காட்ட தைரியம் இல்லாமல் , இவர்கள் மீது தினிக்கிறோம்.
    அதற்காக மற்றவர்கள் மீது கோபப்படுங்கள் என்று கூறவில்லை, வயதான காலத்தில் அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது பணம் அல்லஉண்மையான பாசம் தன்... கோபம் அல்ல ஆறுதலான வார்த்தைகள் தான்...இந்தியா என்ற நாடு பணத்தால் வாழவில்லை பண்பாட்டால் வாழ்கிறது...அதைப்பாதுகாப்பது  நம் கடமை...    

    Parivazhagan