பொறியியல் கல்லூரி மாணவர்களிடம் சமூக அக்கரைக் குறைவு என்ற வாதம் எழுகிறது இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நாம் கடுமையாக உழைக்கவேண்டும், ஒரு பொறியியல் கல்லூரியின் முனைவர்பட்ட ஆய்வு (PhD) மாணவன் என்றமுறையில், இன்று பொறியியல் கல்லூரி மாணவர்கள் செய்யவேண்டிய "ஐந்து" செயல்களாக நான் நினைப்பது...
- தினந்தோறும் நாளிதழ் படிக்கவேண்டும். சமூக வலைதளங்களில், இந்த சமூகத்திற்கு ஏற்ற நல்ல கருத்துகளைப் பதிவிட வேண்டும். நம்மைச் சுற்றி நல்ல கருத்துகள் உலவ வேண்டும்.
- இந்தியாவின் வரலாறு, உலக நாடுகளின் வரலாறு, நம் தேசத்தலைவர்களின் வரலாறு ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.நல்ல புத்தகங்கள் படிக்கவேண்டும்.
- தினந்தோறும் நண்பர்களிடம், குடும்பத்தினரிடம், ஒரு பதினைந்து நிமிடமாவது நாட்டு நடப்புகளைப்பற்றி, அரசியல் நிகழ்வுகள் பற்றி விவாதிக்க வேண்டும்.
- சமூக சிந்தனை வேண்டும், நம்முடைய கல்லூரியிலோ, நகரிலோ, ஊரிலோ நல்ல சித்தனை கொண்ட ஒரு குழுவான மக்களோடு இணைந்து நம் பகுதியின் முன்னேற்றத்திற்குச் சமூக அக்கறையோடு செயல் பட வேண்டும்.நாட்டின் வளர்ச்சியில் நம்முடையப் பங்கும் இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment