ஒரு பொருளை தயாரிக்க, உற்பத்தி செய்ய எவ்வளவு நீர் (water) தேவைப்படுகிறதோ அதை "மறைநீர்" என்பர். பல நாடுகள் "மறைநீர்" அளவை அறிந்தே தங்கள் நாட்டில் பொருள்களை உற்பத்தி செய்கின்றன... ஆனால் நம்மிடம் அதன் விழிப்புணர்வு இல்லை...
ஒரு கிலோ அரிசி என்பது 2500 முதல் 3000 லிட்டர் தண்ணீருக்குச் சமம். ஒரு கிலோ அரிசியை உருவாக்க இந்தளவு தண்ணீர் தேவைப்படுகிறது என பொருள். அந்தளவு நீர் அரிசியில் மறைந்துள்ளது.1.1 டன் எடையுள்ள காரை, உற்பத்தி செய்ய 4 லட்சம் லிட்டர் தண்ணீர் மறைநீராக உள்ளது. ஒரு ஜீன்ஸ் பேன்ட் தயாரிக்க 10 ஆயிரம் லிட்டர் மறைநீர் தேவை.
ஒரு கிலோ அரிசியும் 3000 லிட்டர் தண்ணீரும் ஒன்றா...
ஒரு ஜீன்ஸ் பேண்டும் 10 ஆயரம் லிட்டர் தண்ணீரும் ஒன்றா...
பல பன்னாட்டு நிறுவனங்கள் அதிகமாக தண்ணீர் (மறைநீர்) தேவைப்படும் பொருள்களை, தொழிற்சாலைகளை நம் நாட்டில் நிறுவி இருப்பது இதன் காரணமாகத் தான்.
ஆதிகமாக மறைநீர் தேவைப்படும் பொருள்களை இனி இறக்குமதி செய்யலாம், குறைவான மறைநீர் தேவைப்படும் பொருள்களை நாம் உற்பத்தி செய்யலாம்.நீரின் வளம் குறைந்து வரும் இந்நாட்களில், நீரின் அளவை அறிந்து இனி நாம் பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
இனியாவது நீரின் அளவை குறைவாக பயன்படுத்தும் தொழிற்சாலைகளை காட்டுவோம் , குறைவான நீரை உட்கொள்ளும் பொருள்களை உற்பத்தி செய்வோம், நாட்டின் நீர் வளம் காப்போம்...
தண்ணீரின் அவசியத்தை இனியாவது நாம் புரிந்து கொள்ள வேண்டும்...
No comments:
Post a Comment