ஜல்லிக்கட்டு என்றால் என்ன?
ஜல்லிக்கட்டு என்பது புராதனமான நம்முடைய பாரதப் பண்பாட்டில் இருக்கும் வீர விளையாட்டு, நம் நாடு முழுவதும் பல்வேறு பெயர்களில் மாடுகளுடன் விளையாடும் விளையாட்டுகள் இருக்கின்றன. நம் தமிழ்நாட்டில் பொங்கல் திருநாள் சமயத்தில் கிராமத்துக் கோவில்களில், காளைகளுக்கு கிராமத்து தெய்வங்களின் முன் பூஜை செய்து வழிபட்டு அவற்றை ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுப்புவர். ஒவ்வொரு ஊருக்கும் பொதுவாக ஊர் காளைகள், கோவில் காளைகள் என வளர்க்கப்படும். கோவில் காளைகள் , ஊர்காளைகள், தனிநபர் வளர்க்கும் காளைகள் என பலவும் வாடிவாசல் வழியாக துல்லிக்குதிக்கும். இவற்றை மாடுபிடி வீரர்கள் அடக்குவார்கள். நல்ல ஆரோக்கியமான உடல் வலிமையுள்ள மாடுகளை மட்டுமே போட்டிக்கு அனுப்புவர். மாடுபிடி வீரர்களும் நல்ல உடல்நலத்துடன் இருக்கவேண்டும். காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் ஆகியோரின் உடல் சரியான முறையில் இருக்கிறதா என்று மருத்துவ சோதனையும் நடைபெறும்.
தடம் மாறும் மாணவர் போராட்டம் !
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் போராட்டம் மாணவர்களால் தொடங்கப்பட்டது என்றாலும் அதன் போக்கு நமக்கு சந்தேகங்களை அளிக்கின்றது, உண்மையிலையே இது பெரும் போராட்டம் தான் அனாலும் போராட்டம் என்ற பெயரில் பாரத பிரதமர், தமிழக முதல்வர் ஆகியோரை தரம் தாழ்த்தி, மிகவும் அநாகரிகமாக, ஆபாசமாக விமர்சனம் செய்வது, தனித்தமிழ்நாடு கோருவது வருத்தமளிக்கிறது. மாணவர் போரட்டத்தின் நோக்கம் சரி என்றாலும் அதன் வழிமுறை தவறு. நாம் ஜல்லிக்கட்டிற்கு, மாணவர் எழுச்சிக்கு ஆதரவு என்றாலும் தவறான போராட்ட வழிமுறைக்கு துணை போகக்கூடாது.
No comments:
Post a Comment