Friday, 25 July 2014

தமிழ் அறிவியல் மொழியாக வேண்டும் ! அரசும், நாமும் என்ன செய்ய வேண்டும் ?

தமிழை அறிவியல் மொழியாக மாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் இன்று இருக்கிறோம், தமிழில் அறிவியல் சார்ந்தப் புத்தகங்கள் வராதவரை தமிழை நாம் வளர்ப்பது கடினம். பொறியியல், மருத்துவம் ஆகிய துறைகளில் உள்ள கருத்துகள், விளக்கங்கள், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட வேண்டும், இதன் மூலம் அந்தத் துறைகளைப் படிப்பவர்களிடம் அந்தத் துறை சார்ந்த புரிதல் அதிகமாக வளரும். ஆங்கிலத்தில் படிக்கும் பாடங்களை அதற்கு இணையாக தமிழில் படிக்கும் பொழுது இன்னும் கூடுதலாக, அதிகமாக அதில் உள்ள கருத்துகள் மனதில் பதியும். 

"யாரையும் நீங்கள் கட்டாயமாகத் தமிழில் தான் படிக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை " நாம் ஆகிலத்தில் படிக்கும் பொழுது ஒரு துணை நூல் போல, ஒரு Reference Book  போல தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட நூலைப் பயன்படுத்தலாம். “என்னுடைய ஒரே கருத்து தமிழில் மொழிமாற்றம் செய்தால் அவை நமக்கு எளிதாகப் புரியும், பொறியியலும், மருத்துவமும்  படிப்பதற்கு எளிதானதாக மாறும்”. உலகத்தோடு தொடர்பு கொள்ள ஆங்கிலவழிக் கல்விதான் சிறந்தது, எனினும் பாடங்களை எளிதில் கற்றுக்கொள்ள, புரிந்து கொள்ள தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டப் புத்தகங்கள் உதவும். இது அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும். 

இன்று பொறியியல் படிப்பவர்களில் பலர் தங்கள் பாடங்களைப் புரிந்து கொள்வதில் மிகவும் கஷ்டப்படுகின்றனர், இவர்களுக்கு தமிழில் மொழிமாற்றம் செயப்பட்டப் புத்தகங்கள் உதவும்.  பொறியியல் கல்லூரிகளில் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருக்கிறது அதில் தவறில்லை அந்நிலை தான் தொடரவேண்டும், உலகத்தோடு தொடர்புகொள்ள இம்முறை தான் உதவும், அதே சமயம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பொறியியல் புத்தகங்களை மாணவர்கள் மத்தியில் கொடுத்து அவர்களைப் படிக்க வைத்து  அவர்களின் பாடங்கள்  எளிதில் புரியும் படி செய்தல் வேண்டும். 

ஒரு மாணவனை/மாணைவியை கல்லூரியில் படிக்கவைத்தல் மட்டுமல்ல, படிக்கும் மாணவனின் பாடங்கள் அவனுக்குப் புரியும் படி செய்தாலும் ஒரு அரசினுடைய, பல்கலைக்கழகத்தினுடைய கடமையாகிறது. 
இது நாம்முடைய கடமையும் கூட !

இந்த மாற்றம் தான் நாம் இன்று, நம் தமிழுக்குச் செய்ய வேண்டியது ! 

கவனத்தில் கொள்ளுமா அண்ணாப் பல்கலைக்கழகம் ?
கவனத்தில் கொள்ளுமா தமிழக அரசு ?   

Sunday, 20 July 2014

நம் பாரத நாடு, பழம் பெரும் நாடு !

"உலகின் முதல் பல்கலைக்கழகம் கி.மு 700 ல் தட்சசீலத்தில் நிறுவப்பட்டது! உலகெங்கிலும் இருந்து சுமார் 10,500 க்கும் அதிகமான மாணவர்கள் 146 க்கும் மேற்பட்ட துறைகளில் இங்கு கல்வி கற்றனர்"

"உலகின் மிகவும் பழமையான மொழி தமிழ் !
50 ஆயிரம் ஆண்டுகளாகப் பேசப்பட்டு, மக்களின் பயன்பாட்டில் இன்றளவும் இருக்கும் ஒரே மொழி தமிழ் மொழி !"

"பாரததேசம் ஒரு குட்டி பூகோளம், எத்தனையோ துக்கங்களைத் தாங்கிக்கொண்டும் கணக்கற்ற அதிர்ச்சிகளுக்கு தலை கொடுத்ததும் பாரதம் இன்றளவும் பிழைத்து இருக்கிறது, காரணம் சிறப்பான சாதனைகள் புரியும் ஆற்றல் அதற்கு உண்டு. உலகத்தைக் காப்பதர்காகவே ,பாரதம் இன்னும் உயிர் வைத்துக் கொண்டிருக்கிறது. பாரதம் கொடுக்க இருக்கும் தானத்தைப் பெற, உலகமே காத்திருகிறது                                                                                                                                                                                                              - ஸ்ரீ நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

"தற்கால விஞ்ஞானமும் புரிந்துகொள்ள முடியாத அறிய விஞ்ஞான உண்மைகள் வேதத்தில் உள்ளன" 
                                                                                                              - ஸ்ரீ அரவிந்தர்

"இந்தியா அனைத்து மதங்களின் தாயக இருக்கிறது. இந்தியாவில் அறிவியலும் மதமும் முழுமையான இணக்கத்துடன் என்று செயல்படுகின்றனவோ அன்று இந்தியா உலகின் தாயாக வழிகாட்டும் " 
                                                                                   - ஸ்ரீ அன்னி பெசன்ட் அம்மையார்

"இயேசு கிறிஸ்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டிற்கு முன்னர் இங்கிலாந்தில் உள்ள மனிதர்கள், தங்களுடைய ஆடையற்ற உடலில் பல வண்ணங்களைத் தீட்டிக்கொண்டு, காட்டுமிராண்டிகளாக காடுகளிலும் குகைகளிலும் வாழ்ந்தபொழுது, கீழை நாட்டிலுள்ள இந்தியர்கள், உயர்ந்த லட்சிய நாகரீக வாழ்க்கை வாழ்ந்து இருகிறார்கள்" 
                                                                                           - மெகாலே, இங்கிலாந்து.
                                                     (இந்தியாவின் கல்விமுறையை தயாரித்தவர்)

Tuesday, 15 July 2014

வேண்டும் "வேத அறிவியல்"

நம்முடைய வேதங்களில்,உபநிதங்களில்,புராணங்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள், அறிவியல் சார்ந்த கருத்துகள்,அறிவியல் சார்ந்த விளக்கங்கள் முதலியனவற்றை நம்முடைய பள்ளிப் பாடப் புத்தகத்தில் சேர்த்தல் வேண்டும். 

இதன் மூலம் நம் முன்னோர்கள் விட்டுப்போன அறிவியல் ஆய்வுகளை நம் இளையதலைமுறை மேற்கொள்ள வசதியாக இருக்கும்.நம் நாட்டு ரிஷிகளும்,அறிவுஜீவிகளும் கண்டுபிடித்த விஷயங்கள் நமக்குப் பயன்படும்,அது நமக்கு பெருமையாகவும்,பயனுள்ளதாகவும் அமையும். 

இன்று பெரும்பான்மையான மக்கள் யாரும் வேதங்களைப் படிப்பதில்லை (ஏன் ஹிந்துக்கள் இன்று பகவத் கீதையைக் கூட யாரும் ஒழுங்காகப் படிபதில்லை)அதில் இருக்கும் கருத்துகள் நமக்குப் தெரியாமலேயே இருந்து விடுகிறன.அவை குறிப்பாக சமஸ்கிருதத்தில் இருப்பதால் நாம் யாரும் அதைப்படிப்பது இல்லை. இதற்கு ஒரே தீர்வு நம் பள்ளிப் பாடப் புத்தகத்தில் அறிவியல் பாடத்தில் "வேத அறிவியல்" என்று நம்முடைய  முன்னோர் நமக்கு வழங்கிய கொடையான வேதங்களை நம் இளையதலைமுறை மாணவர்களிடம் கொண்டுசெல்ல வேண்டும். 

"பிற மொழியில் இருக்கும் நல்ல நூல்களை, தமிழில் மொழிமாற்றம் செய்தல் வேண்டும்" என்றரர் தேசிய கவி பாரதி, அதற்கேற்ப சமஸ்கிருதத்தில் இருக்கும் அறிவியல் கருத்துகளை தமிழில் மொழிமாற்றம் செய்தல் வேண்டும். 

சம்ஸ்கிருத அறிவியலை புறம் தள்ளிவிட்டு "பகுத்தறிவு" பேசி என்ன பயன் ?   

Tuesday, 8 July 2014

நாம் செய்யவேண்டிய "ஐந்து"

பொறியியல் கல்லூரி மாணவர்களிடம் சமூக அக்கரைக் குறைவு என்ற வாதம் எழுகிறது இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நாம் கடுமையாக உழைக்கவேண்டும், ஒரு பொறியியல் கல்லூரியின் முனைவர்பட்ட ஆய்வு (PhD) மாணவன் என்றமுறையில், இன்று பொறியியல் கல்லூரி மாணவர்கள் செய்யவேண்டிய "ஐந்து" செயல்களாக நான் நினைப்பது... 
  • தினந்தோறும் நாளிதழ் படிக்கவேண்டும். சமூக வலைதளங்களில், இந்த சமூகத்திற்கு ஏற்ற நல்ல கருத்துகளைப் பதிவிட வேண்டும். நம்மைச்  சுற்றி நல்ல கருத்துகள் உலவ வேண்டும். 
  • இந்தியாவின் வரலாறு, உலக நாடுகளின் வரலாறு, நம் தேசத்தலைவர்களின் வரலாறு ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.நல்ல புத்தகங்கள் படிக்கவேண்டும்.
  • தினந்தோறும் நண்பர்களிடம், குடும்பத்தினரிடம், ஒரு பதினைந்து நிமிடமாவது நாட்டு நடப்புகளைப்பற்றி, அரசியல் நிகழ்வுகள் பற்றி  விவாதிக்க வேண்டும்.
  • சமூக சிந்தனை வேண்டும், நம்முடைய கல்லூரியிலோ, நகரிலோ, ஊரிலோ நல்ல சித்தனை கொண்ட ஒரு குழுவான மக்களோடு இணைந்து நம் பகுதியின் முன்னேற்றத்திற்குச் சமூக அக்கறையோடு செயல் பட வேண்டும்.நாட்டின் வளர்ச்சியில் நம்முடையப் பங்கும் இருக்க வேண்டும்.
  • நம்முடைய நேரத்தைப் பயனுள்ள விஷயங்களில் நம் முன்னேற்றத்திற்கு ஏற்றக் காரியங்களில் செலவிட வேண்டும். மக்கள் பிரச்சனைகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். நம் நாட்டின் கலாச்சாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.
    Engineering Students Social Duty