உலகம் முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்களின் இதயத்தில் உதாரண புருஷராக,
வழிகாட்டும் விளக்காக, சமூக குருவாகத் திகழும் ஒப்பற்ற தலைவர் சுவாமி விவேகானந்தர்.
தூங்கிக் கொண்டிருந்த மக்களை தட்டி எழுப்பி நம் பாரத நாட்டின் சுதந்திரத்திற்காகத்
தயார் செய்தவர், நம் கலாச்சாரத்தின், ஆன்மிகத்தின் வலிமையை உலகமெங்கும்
பரப்பியவர், உலகநாடுகள் பாரதத்தைப் பெருமையோடு உற்று நோக்கச் செய்தவர்.
சுதந்திரப் போராட்டதில் நேரடியாக ஏன் பங்கு கொள்ளவில்லை என்று சிலர்
கேட்டபொழுது “முதலில் மக்களிடம் நமக்குச் சுதந்திரம் வேண்டும், என்ற எண்ணம் உருவாக
வேண்டும், நாம் உருவாக்க வேண்டும் அதைத் தான் நான் செய்து கொண்டு இருக்கிறேன்” (சுதந்திரம்
வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் பலர் தன்னம்பிக்கை இல்லாமல் மனம் நொந்து இருந்த
காலம்) என்று கூறி மக்களை நாட்டின் விடுதலைக்கு தயார் செய்தவர், நம் சுவாமி விவேகானந்தர்
!
நாடு உங்களை என்றும் மறக்காது !
No comments:
Post a Comment