தமிழ் ஈழப் பிரச்சனையை, காஷ்மீர் விவகாரத்தோடு ஒப்பிட்டு பேசுவது தவறு...
காஷ்மீருக்கு நாம்,நம் அரசு கொடுத்துள்ள சலுகைகள், செய்துள்ள வசதிகள் ஏராளம்...கஷ்மீரில் வெள்ளம் வந்தபொழுது நாம் தான் ஓடிச்சென்று காப்பற்றினோம், வேறு யாரும் இல்லை
... காஷ்மீர் என்றுமே நம் நாட்டின் ஒரு பகுதிதான், இது தான் தமிழ் மக்களின் எண்ணம். ஈழத்தைக் காரணம் காட்டி,காஷ்மீர் பிரிவினை பேசுவதை தமிழ் மக்கள் ஒரு பொழுதும் ஏற்கமாட்டார்கள்.
"சலுகைகள் கொடுத்தது,கொடுப்பது சுதந்திரத்தை அனுபவிக்கத் தான், பிரிவினை வாதிகளோடு சேர்ந்துகொண்டு காஷ்மீரை அழிப்பதர்க்கல்ல..."
தினம் தோறும் நம் ராணுவ வீரர்கள் பலர் கஷ்மீரைக் காப்பதர்காக உயிரைத் தியாகம் செய்கின்றனர்...பிரிவினை பேசி அவர்களின் தியாகத்தை கொச்சைப் படுத்தாதீர்கள்
... PLEASE.......
"இந்திய பிரிவினையைத் தூண்டும் எந்த ஒரு அமைப்பையும் , கட்சியையும் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், யார் நினைத்தாலும் தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து பிரிக்க முடியாது, அதற்கு தமிழ் மக்களாகிய நாங்கள் அனுமதிக்க மாட்டோம்."
இமயம் முதல் குமரி வரை இந்தியா என்றுமே ஒரே நாடு தான் !
இது எங்கள் தேசம் !
இது எங்கள் மண் !
இது எங்கள் விவேகானந்தனும்,பாரதியும் பிறந்த நாடு !
இது எங்கள் புண்ணிய பூமி !
இது எங்கள் ஞான பூமி !
No comments:
Post a Comment