Monday, 15 December 2014

" மாதங்களில் நான் மார்கழி "

" மாதங்களில் நான் மார்கழி "
- ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா-
(ஸ்ரீ மத் பகவத் கீதை - 10:35) 

தொடங்கிவிட்டது மார்கழி மாதம் ! (இன்று முதல் -16.12.2014)
கோதை நாச்சியார் ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை 


        "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து
ஓங்கு பெறும் செந் நெல் ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்" (3 வது பாடல் )

பொருள்:வானம் வரை உயர்ந்து மூவலுகம் அளந்த உத்தமனின் பெயரை உச்சரித்து நாங்கள் நம் பாவை நோன்பிற்காக ஒன்றுபட்டு நீராடினால், வறுமை என்னும் தீங்கு ஒழியும் வண்ணம் மாதந்தோறும் மும்மாரி பெய்து அதனால் ஓங்கி வளர்ந்த செந்நெற் பயிர்களுக்கு நடுவே கயல்கள்(மீன்கள்)துள்ளி விளையாடவும், அழகிய குவளை மலரில் ஒளியுடைய வண்டுகள் உறங்கவும், கொட்டகையில் அசையாமல் ஓரிடத்தில் நின்று, பருத்த முலைகளை இருகைகளாலும் பற்றி (இடையர்கள்) குடம் குடமாக பால் கறக்கும் வள்ளல் தன்மை உடைய பசுக்களும், நீங்காத செல்வமும் நிறைந்திருக்க நாம் பாவை நோன்பு மேற்கொள்வோம்.

ஒருநாளின் ஒவ்வொரு மணித்துளியும் இறைவணக்கத்துக்கு உகந்தது என்றாலும் குறிப்பிட்ட நாழிகைகளை மட்டும் இறைவனுக்கென்றே ஒதுக்கியிருப்பார்கள். அதிகாலை நான்கு முதல் ஆறு மணி வரை இறைவணக்கத்துக்காகவே அர்ப்பணிக்கப்பட்ட நேரம்.

புள்ளினங்கள் கவிபாடி உலகத்தைத் துயிலெழுப்பும் அதிகாலை, அற்புதமானது. மனதில் சலனங்கள் ஏதுமின்றி இறைவனோடு ஒன்றுவதற்கு ஏற்ற பொழுது, இதைவிட வேறென்ன இருக்கமுடியும்? அதனால்தான் அந்த அதிகாலைப் பொழுதை ‘பிரம்ம முகூர்த்தம்’ என்று முதன்மைப்படுத்தினார்கள்.

நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். தை மாதம் தொடங்கி ஆனி வரை அவர்களுக்குப் பகல் பொழுதாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி வரை இரவுப்பொழுதாகவும் அமையும். அப்படிப் பார்க்கும்போது அதிகாலையான பிரம்ம முகூர்த்தம் மார்கழியில்தான் வருகிறது. தேவர்களுக்கே பிரம்ம முகூர்த்தமாக இருக்கிறபடியால், மார்கழி மாதம் மானிடர்களுக்கும் சிறந்ததாகிறது. அந்த மாதத்தில் உலக நாட்டங்களைக் குறைத்து, இறைவனிடமும் அவர் திருவடி சார்ந்த செயல்பாடுகளிலுமே மனம் ஒன்ற வேண்டும் என்பதற்காகத்தான் வேறெந்த நிகழ்வுகளையும் நடக்காமல் பார்த்துக் கொண்டார்கள். அதன் வழியொட்டியே மார்கழியில் சுப நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதேநேரம் இறைவனிடம் மனம் ஒன்ற வேண்டும் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.

மார்கழியில் அதிகாலை துயிலெழுவதும், வாசல் தெளிப்பதும் மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் புத்துணர்ச்சி தரும். சூரியனிடம் இருந்து வருகிற ஓசோனின் தாக்கம் மார்கழி அதிகாலையில் நல்லவண்ணமாய் இருக்கும். அதிகாலையில் வெளியே வருவதால் அந்தக் காற்றும், கதிரும் உடலை வன்மைப்படுத்தும்.

மார்கழியில் சுபநிகழ்வுகளைத் தவிர்ப்பதற்காக இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. குடியானவர்கள், தை மாதத்தில் வருகிற பொங்கலுக்குத் தேவையான தானியங்களையும், கரும்பு, மஞ்சள் முதலான பொருட்களையும் அறுவடை செய்து வீடுகளுக்குக் கொண்டுவரும் பணியில் மார்கழி மாதம் முழுவதும் செலவிடுவார்கள். அதனால் அந்த மாதத்தில் சுப நிகழ்வுகளுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் இருந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் சுபநிகழ்வுகளைத் தவிர்த்த மக்கள், இறைவழிபாட்டுக்கு அதிக நேரம் ஒதுக்கியிருப்பதும் இந்த மார்கழி மாதம்தான்.
"காதலன் கண்ணனையே கணவனாகப் பெற்ற பக்தை ஆண்டாள்" 
ஆண்டவனையே அன்பால் ஆண்டதால் கோதை நாச்சியார் 
"ஆண்டாள்" என்று அழைக்பெற்றார்


விவசாயத்தை வளர்ப்போம் !

விவசாயிகள் தற்கொலை விண்ணில் அறுவடை செய்யவா ? 
விவசாயத்தை வளர்ப்போம் !
விவசாயியை போற்றுவோம் ! 

Thursday, 11 December 2014

ஜுன் 21 சர்வதேச யோகா தினம் ! June 21 International day of Yoga !

பிரதமர் மோடி வலியுறுத்தியதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. அறிவித்து அதற்கான தீர்மானம் பொதுச்சபையில் நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் பிரதமரின் கோரிக்கையை ஐ.நா. நிறைவேற்றியுள்ளது மட்டுமல்லாது. யோகாவிற்கும் சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது !

ON behalf of INDIA Prime Minister Narendra modi request UN to declare June 21 as International day of Yoga, with support from majority of 175 nations, UN Declared June 21st as International day of Yoga !

Wednesday, 10 December 2014

வாழ்த்துகள்...Congrats...

வாழ்த்துகள் நோபல் பரிசு வென்ற "Kailash Satyarthi " மற்றும் 
"Malala Yousafzai"அவர்களுக்கு ... 
Congrats for Nobel Prize 2014 Winners - The Nobel Peace Prize 2014

பாரதியாரின் பிறந்த தினம்...Bharathiar Birthday ...

இன்று மகாகவி,தேசகவி "பாரதியாரின்" பிறந்த தினம் (11.12.1882)
தமிழ் தாயின் தலைமகனுக்கு என் வணக்கங்கள்... 
என்றும் எங்கள் நினைவில் நீங்கள் !
என்றும் உங்கள் வழியில் நாங்கள் !



Tuesday, 9 December 2014

பாரதம் எங்கள் தாய் நாடு ! INDIA is our NATION

தமிழ் ஈழப் பிரச்சனையை, காஷ்மீர் விவகாரத்தோடு ஒப்பிட்டு பேசுவது தவறு... காஷ்மீருக்கு நாம்,நம் அரசு கொடுத்துள்ள சலுகைகள், செய்துள்ள வசதிகள் ஏராளம்...கஷ்மீரில் வெள்ளம் வந்தபொழுது நாம் தான் ஓடிச்சென்று காப்பற்றினோம், வேறு யாரும் இல்லை ... காஷ்மீர் என்றுமே நம் நாட்டின் ஒரு பகுதிதான், இது தான் தமிழ் மக்களின் எண்ணம். ஈழத்தைக் காரணம் காட்டி,காஷ்மீர் பிரிவினை பேசுவதை தமிழ் மக்கள் ஒரு பொழுதும் ஏற்கமாட்டார்கள்.
"சலுகைகள் கொடுத்தது,கொடுப்பது சுதந்திரத்தை அனுபவிக்கத் தான், பிரிவினை வாதிகளோடு சேர்ந்துகொண்டு காஷ்மீரை அழிப்பதர்க்கல்ல..."
தினம் தோறும் நம் ராணுவ வீரர்கள் பலர் கஷ்மீரைக் காப்பதர்காக உயிரைத் தியாகம் செய்கின்றனர்...பிரிவினை பேசி அவர்களின் தியாகத்தை கொச்சைப் படுத்தாதீர்கள் ... PLEASE.......

"இந்திய பிரிவினையைத் தூண்டும் எந்த ஒரு அமைப்பையும் , கட்சியையும் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், யார் நினைத்தாலும் தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து பிரிக்க முடியாது, அதற்கு தமிழ் மக்களாகிய நாங்கள் அனுமதிக்க மாட்டோம்."
இமயம் முதல் குமரி வரை இந்தியா என்றுமே ஒரே நாடு தான் !
இது எங்கள் தேசம் !
இது எங்கள் மண் !
இது எங்கள் விவேகானந்தனும்,பாரதியும் பிறந்த நாடு !
இது எங்கள் புண்ணிய பூமி !
இது எங்கள் ஞான பூமி !