மோடி ஏன் ஸ்ரீ மத் பகவத் கீதையைப் பரிசாகத் தர வேண்டும் ?
பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திக்கும்போது, அவருக்கு 'காந்தியின் பார்வையில் கீதை' என்ற புத்தகத்தை பரிசாக அளித்தார் (பிரதமர் மோடி ஒபாமாவுக்கு பல்வேறு பரிசுகளை கொடுத்தார். இதில் சிறப்பான பரிசாக காந்தி விளக்கவுரை எழுதிய பகவத்கீதை புத்தகத்தை கொடுத்தார். இந்த புத்தகம் காதியில் பொதியப்பட்டு , இதற்கு மேல் சில்க் துணி வேயப்பட்டு கொடுத்தார்). இந்த மண்ணின் பொக்கிஷங்கள்
- இராமாயணம்; மகாபாரதம்
தென் நாட்டவரின் சிறந்த நூல்கள் வட நாட்டவருக்குத் தெரியாது வட நாட்டவரின் சிறந்த நூல்கள் தென் நாட்டவருக்குத் தெரியாது, ஆனால் நம் நாட்டில் அனைவரும் அறிந்த, அனைவருக்கும் புரிந்த, சிறந்த இதிகாசங்கள் இராமயணமும், மகாபாரதமும். சிறு குழந்தையைக் கேட்டால் கூடச் சொல்லும் ஸ்ரீராமனின் கதையை ! இராமயணமும், மகாபாரதமும் எம் தேசத்து மக்களோடும், இம் மண்ணோடும் கலந்து விட்ட இதிகாசங்கள் ! இது மதநூல் மட்டுமல்ல இம் மண்ணின், இக் கலாச்சாரத்தின் கதை ! இந்தியா வேறு இராமாயணம் வேறு அல்ல, இந்தியா வேறு மகாபாரதம் வேறு அல்ல.
"1997 ஜூன் மாதம் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள முதல்வர் ரோமுக்கு
சென்றிருந்த போது போப்பாண்டவருக்கு பகவத் கீதையை பரிசளித்தார்"
No comments:
Post a Comment