Sunday, 12 September 2021

கண்ணனை எப்படி பார்ப்பது ? | Krishna | கிருஷ்ணா | Part 1 | அ.பரிவழகன்

கண்ணனை எப்படி பார்ப்பது ? சுட்டிக் குழந்தையாகவா? குழலூதும் காதலனாகவா? மாயம் செய்யும் மன்னவனாகவா? கீதை சொல்லும் ஆசானாகவா ? எல்லோருக்கும் அருளும் இறைவனாகவா? எப்படியும் பார்க்கலாம் கிருஷ்ணனை ! 

ஏழைகளின் தெய்வம், எளியோரின் கடவுள், மக்களின் மன்னவன், துயரம் தீர்க்கும் தேவன் என எப்படியும் வணங்கலாம், போற்றலாம், கொண்டாடலாம் கோபாலனை.

ஞானத்தை வாரி வழங்கும் வள்ளல், மனித உணர்வுகளின் சிக்கல்களை, புரிதல்களை, கடமைகளை அர்ஜுனனுக்கு உபதேசிப்பதாய், அனைவருக்கும் கீதையின் வடிவில் ஞானப் பெட்டகத்தை அருளிய பரமாத்மா அவன்.  

பலரின் வழிகாட்டி, பலரின் வாழ்வியல் ஆசான் , பலரின் காக்கும் தெய்வம் கண்ணன் !

Monday, 17 May 2021

சுயமுன்னேற்றத் தன்னம்பிக்கைப் பதிவு – 2 - பேராசிரியர் Dr.அ.பரிவழகன் - Self Motivation and Self Confidence

ஏதோ ஒன்று நாம் சாதிக்க வேண்டும் என்று மனது சொல்கிறது, சமயம் வரும் வரை காத்திருக்கத்தான் வேண்டுமா ? “உழைப்பு நம்முடைய கட்டுப்பாட்டில் தானே இருக்கிறது” இன்றே களத்தில் இறங்குவோம் எதிர்ப்படும் இன்னல்கள் அனைத்தும் தவிடு பொடியாகட்டும்.

துவண்டு வீட்டில் இருக்கப் பிறக்கவில்லை நாம், துயரங்களைத் தூக்கி வீசும் வல்லமை பெற்றுள்ளோம் நாம், ம் புறப்படுங்கள்,

இனி ஒவ்வொரு மணித்துளியும் விதைகளாகட்டும்