Sunday, 5 January 2020
சுயமுன்னேற்றத் தன்னம்பிக்கைப் பதிவு – 1 - Dr.அ.பரிவழகன் - Self Motivation and Self Confidence
எண்ணங்கள் வலிமையானவை அதன் ஆற்றல் அசாத்தியமானது, நல்ல ஆரோக்கியமான எண்ணங்கள் நம்மைச் சுற்றி ஒரு நேர்மறையான அதிர்வுகளை உருவாக்கும். நல்ல வாசகங்கள், மனதிற்கு ஊக்கம் தரும் பொன்மொழிகள், நம்மைச் சுறு சுறுப்பாக்கும் புத்தகங்கள், கோவில்களில் ஓதப்படும் மந்திரங்கள், என எது வேண்டுமானாலும் இருக்கலாம். நம்மைச் சுற்றி ஒலிக்கப்படும், பேசப்படும், எழுதப்படும் நல்ல ஆக்கபூர்வமான நிகழ்வுகளுக்கு ஒரு அற்புதமான வலிமை உண்டு. நாம் தனி மனிதர் அல்ல நமக்கும் மேலான சக்தி ஒன்று உள்ளது, அது நம்மை கவனிக்கிறது, வழிநடத்துகிறது, துவண்டு போகும் பொழுது தோள் கொடுக்கிறது, கண்ணீர் வடிக்கும் பொழுது கை கொடுக்கிறது. நாம் அதை ‘இறைவன்’ என்கிறோம் சிலர் “இயற்கை” (பிரபஞ்சம்) என்கின்றனர். எல்லாம் ஒன்று தான், ஒன்றில் இருந்து வந்ததுதான். கனிவான பேச்சும், தூய்மையான எண்ணமும், நல்லதைப் பேசும் உதடுகளும் பல அதிசயங்களை நிகழ்த்தும் !
நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும்!
Subscribe to:
Posts (Atom)