Saturday, 15 November 2014

Kiss of Love - IIT MADRAS ல் (சென்னை) நடந்த அவலம் !

நாட்டின் மிக உயர்ந்த கல்வி நிறுவனமான IIT MADRAS ல் (சென்னை) நடந்த அவலம் !

நாட்டில் போராட்டம் நடத்த வேண்டிய எத்தனையோ பிரச்சனைகள், அவலங்கள் இருக்க "கட்டிப் பிடிக்க, முத்தம் கொடுக்க " ஒரு போராட்டமா ? ஆணும் பெண்ணும் தனிமையில் அன்பை பகிர்ந்து கொள்வது தானே உண்மையான அன்பின் வெளிப்பாடு, அதுதானே இயற்கையின் நியதி, நடுரோட்டில் ; கல்லூரி வளாகத்தில் அன்பை வெளிப்படுத்தினால், மனிதனுக்கும்; மிருகத்திற்கும் என்ன வித்யாசம் ?

Tuesday, 11 November 2014

திருக்குறள்...Thirukural...

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
                                            பகவன் முதற்றே உலகு"
விளக்கம்: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. எழுத்து எல்லாம் அகரம் முதல - எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து.

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"

படிக்கவேண்டிய புத்தகங்கள் 
ஸ்ரீ மத் பகவத் கீதை 
திருவாசகம் 
திருக்குறள்