Sunday, 28 September 2014

முதல்வர் ஜெயலலிதா கைது ! CM Jayalaitha arrest ...

ஒரு தமிழனாக நம்முடைய முதல்வர் அண்டை மாநிலத்தில் சிறைப் படுத்தப்பட்டு இருப்பது எனக்கு வருத்தமே; அதே சமயம் ஊழல் மலிந்த தேசமாக என் தேசம் மாறிவிடக் கூடாது. குற்றம் யார் செய்தாலும் குற்றமே, இல்லையேல் நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடும்.
அதே சமயம் இந்தக் கடுமையான நீதி விசாரணை மற்ற ஊழல் அரசியல் வாதிகள் மீதும் நடத்தப்பட வேண்டும், இதில் பார பட்சம் காட்டக் கூடாது.
ஜெயலலிதா மட்டும் குற்றவாளி அல்ல ! 

இன்னமும் பெரிய திருடர்கள், ஊழல் அரசியல்வாதிகள் வெளியில் சுதந்திரமாகத் தான் இருக்கிறார்கள். சட்டம் தன் கடமையைச் செய்திருக்கிறது; இனியும் செய்ய வேண்டும் !


தமிழக முதல்வராகிறார் ஓ.பன்னீர் செல்வம் !
எப்படி "ஸ்ரீ ராமன் 14 ஆண்டுகள் காட்டில் வன வாசம் இருந்த பொழுது, பரதன் பத்திரமாக நாட்டை ஆட்சி செய்து மீண்டும் ராமன் வந்தவுடன் ஆட்சியைத் திருப்பிக் கொடுத்தானோ " அது போல பன்னீர் செல்வமும் நாட்டை சிறப்பாக ஆட்சி செய்து மீண்டும் "அம்மா" விடம் வழங்குவார். 

அம்மா மீண்டும் முதல்வராவார் !

Thursday, 25 September 2014

அனைவர்க்கும் நவராத்திரி நல் வாழ்த்துகள் ...Happy Navarathiri ...

அன்னை ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியின் பராக்கிரம வீரமும்
அன்னை ஸ்ரீ லக்ஷ்மியின் குறையாத செல்வ வளமும்
அன்னை ஸ்ரீ சரஸ்வதியின் பெருமைமிகு கல்வி வளமும் 
ஒருங்கேக்கிடைக்கும் பொன் நாட்கள் இந்த நவராத்திரி நாட்கள் ...
(September 25 - October 3, 2014)

ஸ்ரீராம பிரான் வனவாசம் சென்ற சமயத்தில் தன் மனைவியை இழந்தான். கடல் கடந்து சென்று சீதையை எவ்வாறு மீட்பது என்று ஏங்கினான். அதனை உணர்ந்த நாரதர் "ஸ்ரீராமா! நவராத்திரியில் அம்பிகையை முறையாக வணங்கினால் சீதையை மீட்பதற்கான அருள்கிட்டும்'' என எடுத்துக்கூறினார். 

அதோடு நாரதரே ஸ்ரீராமருக்கு குருவாய் இருந்து மாலியவான் மலையில் நவராத்திரி பூஜையினை உபதேசித்தார். ஸ்ரீராமரும் மாலியவான் மலையில் நாரதர் முன் அம்பிகைக்கு நவராத்திரி பூஜை செய்து, தன்னை மறந்து அம்பிகையின் நினைவால் மந்திரத்தை ஓதினார். ஸ்ரீராமரின் பூஜைக்கு மகிழ்ந்த அன்னை, ஸ்ரீராமருக்கு மாலியவான் மலையில் சிம்ம வாகனத்தில் காட்சிளித்தான். 

பிறகு அவன், "ஸ்ரீராமா! உனக்குத் துணையிருப்போர் அனைவரும் வெறும் வானரர் (குரங்கு) அல்ல. தேவர்கள் என்று அறிவாய்! உனக்கு அனைத்தும் அளித்தோம். வெற்றி கொள்வாய்!'' என்று அருளி மறைந்தாள். ராமப-பராவண யுத்தம் நடந்தது. யுத்தத்தில் ராவணன் தன்னிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் இழந்தான்.

அனைத்தையும் இழந்த ராவணன் தன் குலதேவதை துர்க்கையை நினைத்து வணங்கினான். ராவணனுடைய இஷ்ட தேவதையும் துர்க்கையே. ராவணன் நினைத்த உடனேயே துர்க்கை அவன் முன் தோன்றினாள். ராவணன் துர்க்கையை வணங்கி, "அன்னையே! நீ என் சாரதியாய் ஆக வேண்டும்'' என வேண்டினான். 

ராவணனின் பிரார்த்தனைக்கு ஏற்ப துர்க்கை அவன் தேரில் சாரதியாய் நின்றாள். `கலியுகத்தில் தீயவர்களே அதிக பலம் பெறுவர். தனது பணத்தாலும், பதவியாலும், பலத்தாலும், ஆணவத்தாலும் தீயவரே அதிகமாயிருந்து நல்லவர்களைத் தளர்ச்சி அடையச் செய்வர்' என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டவே துர்க்கை ராவணனுக்குச் சாரதியாய், 18 கைகளில் ஆயுதங்களை ஏந்தி நின்றாள். 

இதைப் பார்த்த ஸ்ரீராமர் மனம் தளர்ந்தார். தனது கோதண்டத்தைக் கீழே போட்டு விட்டு "தேவி!'' எனக் கதறித் துதித்தார். எனினும், தேவி செவி சாய்க்கவில்லை. ஸ்ரீராமரை நோக்கித் தேரைச் செலுத்தினான். 

இதைப் பார்த்த ஸ்ரீராமர் மிகவும் தவித்தார். "வேறு வழி இல்லையே!'' என்று மீண்டும் மனமுருகி அன்னையைத் துதித்தார். "வெற்றி பெறுவாய் என நீதானே ஆசியளித்தாய். இப்போது அதற்கு நான் தகுதி இல்லையா, என்று ஸ்ரீராமர் கதறினார். 

"அன்னையே! உன்னை என் எதிரியின் தேரினில் சாரதியாய்ப் பார்ப்பதற்கா எனக்கு இரு கண்கள் இருக்கின்றன? அவற்றால் இனி என்ன பயன்? இப்போதே எனது இரண்டு கண்களையும் எடுத்து உனக்குக் காணிக்கையாக அளிக்கின்றேன்'' என்று தன் அம்புகளால் தன் கண்களை நோண்ட முற்பட்டார். 

இதனைக் கண்டதுமே அம்பிகையானவள் ராவணனின் தேரிலிருந்து மறைந்து விட்டாள். ராவணன் பலகோடி யுகங்களாய் நவராத்திரி பூஜையினை விடாது செய்தவன். 

நவராத்திரி பூஜையை விடாது செய்த புண்ணிய பலத்திற்காக அம்பிகையானவள் சிறிது நேரம் சாரதியாய் அமர்ந்தாள். பலநாள் தொடர்ந்து பூஜை செய்தாலும் அதர்மத்தின் வழிச் செல்பவனுக்குச் சிறிது நேரமே. 

ஆனால், தர்மத்தின் வழி செல்லும் ஸ்ரீராமன் மாலியவான் மலையில் ஒன்பது நாள் மட்டுமே செய்த பூஜையால் மனமகிழ்ந்த தேவி, ராவணன் தேரை விட்டு மறைந்து அவனை வெற்றி கொள்ளும் சக்தியையும் கொடுத்தாள். இதனால் போரில் ராமர் வெற்றி பெற்றார்.
______________________________________
ராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் சேதுபதி மன்னர்களின் குலதெய்வமான அருள்மிகு ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் எழுந்தருளிருக்கும் அம்மன் ஆதிபராசக்தியாக காட்சியளிப்பது இதன் தனிச்சிறப்பு ஆகும்.

ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரித் திருவிழா கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெறுவதைப் போல சேதுபதி மன்னர்கள் காலம்தொட்டே வெகுச் சிறப்பாக இன்றும் தொன்று தொட்டு நடைபெற்றுவருகிறது. நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு தினமும் ராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் கவியரங்கம், ஆன்மிக சொற்பொழிவு, பட்டிமன்றம், பரதநாட்டியம், இன்னிசை பாட்டரங்கம், பொம்ம லாட்டம் எனப் பல்வேறு நிகழ்ச்சிகளும், தினந்தோறும் அம்மனுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன.

Friday, 12 September 2014

தமிழ் மொழி பொறியியல் கல்லூரிகளில் தடம் பதிக்க வேண்டும் ...

மாநில அரசு மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திடம் என் இரண்டு கோரிக்கைகள் ...

(1) தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் ஆண்டிற்கு  ஒருமுறை தமிழில் பேச்சுபோட்டி, கட்டுரைப்போட்டி நடத்தவேண்டும்.

(2) இளங்கலை பொறியியல் ( B.E.,) படிப்பில் "இந்திய கலாச்சாரம்" என்ற ஒரு புதிய படத்தைத் தமிழில் தொடங்கவேண்டும்.
  (பள்ளிகளில் உள்ள "அறிவியல் தமிழ்" பாடம் போல்)