வருங்காலத்தில் இந்தியா சந்திக்கப்போகும் பிரச்சனைகளில்ஒன்று, மிக முக்கியமானது, குடி நீர் பற்றாக்குறை, இதைத்தடுக்க நம்மிடம் எந்த ஒரு ஆக்கப்பூர்வமான திட்டமும்இதுவரை இல்லை.
நம் தமிழக முதல்வர் மரியாதைக்குரியசெல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் முந்தய ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மழை நீர் சேமிப்பு திட்டம் ஒருவரப்பிரசாதமான திட்டம் , நிலத்தடி நீரை சேமிக்க ஒருசிறப்பான திட்டம். ஆனால் இது மட்டும் போதாது, நம்நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் குடிநீர்,தண்ணீர்,பற்றாக்குறையைப் போக்க இந்தியாவில் உள்ள முக்கியநதிகளை இணைக்க வேண்டும்.
பெருந்தலைவர்மரியாதைக்குரிய அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின்ஆட்சிக் காலத்தில் யோசிக்கபட்ட "கங்கை காவிரி இணைப்புத் திட்டம் " செயல் படுத்தப்பட வேண்டும். இந்தியாஒன்றும் நீர் வளம் இல்லாத நாடு இல்லை,
நம்முடைய உடம்பில் இருக்கும் நரம்புகளைபோல்இன்றியமையாதது நம்முடைய "தேசமாகிய" உடம்பில்இருக்கும் நதிகள். இந்த நதிகளைப் பாதுகாக்க வேண்டும்,வீணாகக் கடலில் சென்று கலக்கும் நதி நீரை ஒரு சிறுபகுதியை திருப்பி மற்ற நதிகளுடன் இணைத்து இந்தியாமுழுவதும் நதிகளை உலாவவிட்டு நம்முடைய நீர்ஆதாரத்தைப் பெருக்க வேண்டும்.
நதி நீர் இணைக்கப்பட்டால் பல நன்மைகள் உண்டாகும்குறிப்பாக நிலத்தடி நீர் மட்டம் உயரும், சுத்தமான நீர்கிடைக்கும்,விவசாயம் செழிக்கும்,முக்கியமாக மக்களின்குடிநீர்ப் பிரச்சனை தீரும்,கோடை காலத்தில் குடிநீர்தட்டுப்பாடு ஏற்படாது,கோடை காலத்தை சமாளிக்கும் அளவுநீர் வளம் பெருகும், கோடை காலத்தில் கூட விவசாயம்செழிப்பாக வளரும்.
ஆறுகளின் அவசியத்தை உணர்ந்துதான் நம் முன்னோர்"ஆறில்லா ஊர் பாழ்" என்றனர், அனால் இன்றோ ஆற்றுநீரை நாம் பயன் படுத்தாமல் பாழ்படுத்திகொண்டுஇருக்கிறோம்.
மழை பொழியும் அளவு வேற ஆண்டிருக்கு ஆண்டுகுறைந்து கொண்டே வருகிறது, நிலத்தடி நீரும் வற்றிவருகிறது, இந்த நேரத்தில் நதிகளை நாம் சரியாககையாளாவிட்டால் ஆபத்து நமக்குதான். நம்முடைய மக்கள்தொகைக்கு ஏற்றார் போல் நம்முடைய நீர்வளத்தைப்பெருக்க வேண்டும், இல்லையேல் இது பஞ்சத்தில் கொண்டுபோய்விடும், நீர் ஆதாரம் வற்றி வரும் வேளையில் நாம்கையில் இருக்கும் முக்கியமான நீர் ஆதாரம், வளம்நம்முடைய ஆறுகள் அதை வீணாக்கலாமா ?
அணைத்து நதிகளில் இருத்தும் ஒரு சிறு பகுதியை திருப்பிஒரு தேசிய நீரோட்டத்தை உருவாக்க வேண்டும் அந்தத்தேசிய நீரோட்டம் இந்தியா முழுவதும் பயணிக்க வேண்டும்,இது சாதாரண காரியம் அல்ல, மிகுந்த பொருட்ச்செலவும்,நேரமும் தேவைப்படும் எனினும் இதன் பலன்கள்மிகுதியானவை, இத்திட்டத்தை நாம் செய்துதான் ஆகாவேண்டும்.
நதிநீர் இணைப்பு என்பது ஒரே நாளில் நடக்கும் காரியம்அல்ல, அதற்குத் தெளிவான ஒரு கட்டமைப்புச் செயல்திட்டம் வேண்டும். தமிழகத்தில் போடப்பட்ட மழைநீர்சேமிப்புத் திட்டம், இந்தியா முழுவதும் செயல் படுத்தப்படவேண்டும்.
மோடி நதிநீர் இணைப்பை செயல் படுத்துவார?இல்லையேல் குடி நீருக்கும் வெளிநாட்டிடம்கையேந்தும் நிலை தான் வரும்.
பிரதமர் நரேந்திர மோடி வாஜ்பாயின் கனவு திட்டமான நதிநீர் இணைப்பை நிறைவேற்றுவார ?ராமநாதபுரத்தில் தேர்தல் பரப்புரையின் போது நரேந்திரமோடி அறிவித்தது போல கங்கை காவிரி நதி நீர்இணைப்பை செயல் படுத்துவார? காலம் தான் பதில்சொல்லும்.