Saturday 18 July 2015

சனாதன தர்மம் - 3 - இயற்கை வழிபாடு, போர் – Nature Worship and War- அ.பரிவழகன்


இந்து மதத்தை யாரோ ஒரு தனி நபரோ , ஒரு குழுவோ , உருவாக்கிய மாதிரி செய்திகள் கிடையாது , யார் இதை தோற்றுவித்தது என்பதை கண்டரிய முடியாது.

தோற்றம் கண்டரிய முடியாது வரலாறும் தோற்றுப் போகும் நெறி
இந்து சமய நெறி

உலக நாகரிகங்களுக்கு மதம் என்ற முறை தோன்றியது  இயற்கையின் வழியாக, மனிதன் எதை எதை எல்லாம் கண்டு பயம் கொண்டானோ , எவையெல்லாம் அவனைப் பாதித்ததோ; எவையெல்லாம் அவனுக்கு உதவியதோ ; தேவையாக இருந்ததோ அவற்றையெல்லாம், பயத்தோடும் ; பணிவோடும் ; வணங்கத் தொடங்கினான். உலகில் தோன்றிய பல தொன்மையான நாகரிகங்களை எடுத்துப் பார்த்தால் அவையெல்லாம் இயற்கை வழிபாட்டு முறையைப் பிரதானமாகக் கொண்டவைஅது கிரேக்க, ரோம , பாரசீக ; சீன என எந்த நாகரிகமாக இருந்தாலும் சரி. உலகில் இன்னும் பல பெயர் தெரியாத தொன்மையான நாகரிகங்கள் உள்ளன. ஆனால் இயற்கை வழிபாட்டு முறையோடு தோன்றிய பல தொன்மையான நாகரிகங்கள் இன்று வழக்கில் இல்லை, இயற்கையை வணங்கும் பாங்கு இன்று மறைந்து விட்டது

மேற்கூறிய நாகரிகங்கள் தங்களின் புராதணமான இயற்கை வழிபாட்டு முறையை ஒரு மேம்பட்ட சமய நெறியாக வளர்க்க, மாற்ற முடியாமல் தவறிவிட்டதால் அந்த நாகரிகங்களால் உலகில் தொடர முடியவில்லை. அங்கு வாழ்ந்த மனிதர்கள், அறிஞர்கள் தங்களின் வழிபாட்டு முறையை அடுத்த உயரிய நிலைக்கு கொண்டு செல்ல முடியாததற்குப்  பல போர்கள் , படையெடுப்புகள் காரணமாக இருந்திருக்கலாம்.    

நம் பழம் பெரும் பாரதத் திருநாடானது தன்னில் வளர்ந்த இயற்கை முறையான வழிபாட்டைப் பேணிப் பாதுகாத்து, மிக உயர்ந்த நிலைக்கு, ஒரு ஞானப் பெட்டகமாக, உயரிய சமய நெறியாக உருமாற்றி இருக்கிறது. இந்த உயரிய தர்மத்தை தொடர்ந்து வளர்த்துப் பாதுகாத்து நமக்கு வழங்கியவர்கள் எண்ணற்றோர்.

 தெய்வமே மனிதனாக வந்து வளர்த்த ...
மனிதனே புனிதனாக உயர்ந்து வளர்த்த ...
கோடான கோடி ரிஷிகள் தோன்றி வளர்த்த ...
மன்னர்கள் மானத்தோடு வளர்த்த ...
எளிய மக்கள் இனிமையோடு வளர்த்த ...
பாரத குடும்பங்கள் பக்தியோடு வளர்த்த ...
கலாச்சாரம் நம் பாரத ஹிந்து சனாதன கலாச்சாரம் !

இது யாரையும் வற்புறுத்தியோ ; பயத்தைத்தூண்டியோ ; அல்லது போர்கள் ; சண்டைகள் ; சச்சரவுகள் மூலமோ வளர்ந்த கலாச்சாரம் அல்ல. இது முழுவதும் அன்பு மயமான ; பண்பு மயமான ; சமூக நன்மையை போதிக்கும் ; தன்னுடைய சுய தர்மத்தையும் ; சமூக தர்மத்தையும் வளர்த்தெடுக்கும் ஒரு பட்டறையாகவே இருக்கிறது. இங்கு பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் சமூகத்திற்குக் கட்டுப் பட்டவனாகவே இருக்கிறான்.   

"இங்கு தனியாக எந்த ஒரு மனிதனும் பிறப்பதில்லை; அவன் பிறக்கும் பொழுதே சமூகமாகவே பிறக்கிறான்" என்கிறார் சுவாமி விவேகானந்தர்இப்படி இங்கு தனி மனித வாழ்வே சமூகத்தை அடியொற்றியே தர்மத்தை நிலை நிறுத்தும் விதமாகவே இருக்கிறது.

இந்தக் கலாச்சாரத்தில் வாழும் மனிதன் இயல்பாகவே தெய்வீக நாட்டம் கொண்டவனாகவே இருக்கிறான். எந்தக் கடவுளை வணங்கினாலும் ஒரு பற்றோடு உரிமையோடு வணங்குகிறான்"தெய்வீகம் இயற்கையாகவே ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது" என்கிறார்  ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், இதற்குக் காரணம் மனித முயற்சி மட்டும் அல்ல, இயல்பாகவே இந்த கலாச்சாரம் நமக்குக் கொடுத்திருக்கும் ஞானம் ! 
உலகம் முழுக்கப் போர்கள் நடந்து கொண்டிருக்க, "அகிம்சை" என்ற ஆயுதத்தை காந்தி மகான் எடுக்கக் காரணம், இந்த அமைதியை விரும்பும் , அருளை வழங்கும் கலாச்சாரமே !

அதே சமயம் ஆயுதம் எடுத்தாலும் ஒழுக்க நெறியோடு போர் புரியும் மனப்பாங்கை கொடுத்தும் இதுவே !

போரில் ஆயுதம் இல்லாதவரைத் தாக்ககூடாது ,
பெண்களை,குழந்தைகளைக் கொல்லக்கூடாது,
சூரியன் மறைந்த பிறகு போர் கூடாது ,
பிற நாட்டுத் தூதுவரை, பிற நாட்டு புனிதஸ்தலங்களை
கோவில்களை, பசுக்களை , வேதம் ஓதும் அந்தணர்களை , ரிஷிகளை , என யாரையும் தாக்ககூடாது. குறிப்பாக போரில் இருந்து பயந்து புறமுதுகிட்டு ஓடுபவரை தாக்ககூடாது இன்னும் பல வரமுறைகள். இப்படி ஒரு கோட்பாட்டோடு போரிட்டனர் நம் மன்னர்கள், துரதிஷ்டவசமாக பின்னாட்களில் நம்மை ஆக்கிரமிக்க வந்த அன்னியர் , வெளிநாட்டவர் , முகலாயர்கள் , ஆங்கிலேயர்கள் என யாரும் நம் நாட்டின் போர் விதிகளைக் கேட்கக்கூட இல்லை, யாரும் இந்த போர் விதிகளை மதிக்கவில்லை; நம் நாட்டு மன்னர்கள் மட்டுமே போர் விதிகளை மதித்துப் போரிட்டனர்.


"பண்பாடற்ற கூட்டங்கள் , பண்பாடோடு வாழ்ந்த நம் நாட்டு மக்களை அடக்கி ஆண்டது தான் இந்த கலாச்சாரத்தின் கருப்புப் பக்கங்கள்

No comments:

Post a Comment